டேவிட் கமெரூனின் வாழ்வில் வந்த காதல் | www.VijayTamil.Net

டேவிட் கமெரூனின் வாழ்வில் வந்த காதல்

Loading...

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழி மட்டுமல்ல வாழ்வில் நடக்கும் உண்மையான விடயமும் கூட.

htt

வரலாற்றில் புகழ்பெற்ற தலைவர்கள் முதல் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகிய தலைவர்களுக்கு பக்கபலமாக இருந்தது அவரது மனைவியரே.

இதனை அவர்களே உலகிற்கு எடுத்துரைத்துள்ளார்கள். பிரித்தானிய ஜனாதிபதியாக இருந்த டேவிட் கமெரூன் சமீபத்தில் பதவி விலகியபோது கூட, தனது நாட்டிற்கு நன்றி தெரிவித்த பின்னர், அடுத்த கட்டமாக இவர் நன்றி தெரிவித்தது தனது மனைவி சமந்தாவுக்குதான்.

ஏனெனில் தனது பணிக்காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல், அரசியல் வாழ்க்கைக்கும் ஆதரவாக இருந்துள்ளார்.

தனது கணவன் மீது கொண்ட காதல் குறித்து 2010 ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சமந்தா, எனக்கு 21 வயது இருக்கும்போது நண்பர் ஒருவரின் விருந்து நிகழ்ச்சியில் கமெரூனை சந்தித்தேன்.

பிற நண்பர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கமெரூன் மிகவும் வித்தியாசமானவர். அப்போது அவருக்கு வயது 25, அரசாங்க உத்யோகத்தில் இருந்த அவருக்கு அப்போதே அரசியல் மீது அதிக ஆர்வம் இருந்தது.

அந்த விருந்து நிகழ்ச்சியின் மூலம், எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கமெரூன் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட மனிதர் மட்டுமல்லாமல் அனைத்து விடயங்களையும் நேர்மறையாக சிந்திப்பார்.

இதன் காரணத்தினாலேயே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு அரசாங்க பொறுப்பில் இருப்பவர்கள் எப்போதும், பரபரப்பாக இயங்கிகொண்டிருப்பார்கள். ஆனால் கமெரூன் அப்படியல்ல, கூலான மனிதர்.

எங்கள் காதல் பயணம் 2 வருடம் தொடர்ந்தது. அதன்பின்னர் கமெரூனை திருமணம் செய்யும்போது எனக்கு வயது 23.

அன்று தொடங்கி இன்று வரை எங்கள் இருவருக்கும் இடையேயான காதல் மாறவில்லை என்று கூறியுள்ளார்.

காதல் கலந்த அழகிய வாழ்க்கை பற்றி சமந்தா ஒரு பக்கம் எடுத்துரைக்க, கமெரூனோ ஒரே வார்த்தையில் “இவள் என் வாழ்வின் காதல்” என்ற ஒருவார்த்தையோடு முடித்துக்கொண்டார்.

இல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

151
-
Rates : 0
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]