தவறான உடல் எடை குறைப்பு சிகிச்சை: பெண்ணின் உயிரை பறித்த பரிதாபம் | www.VijayTamil.Net

தவறான உடல் எடை குறைப்பு சிகிச்சை: பெண்ணின் உயிரை பறித்த பரிதாபம்

Loading...

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் பெண் ஒருவர் பலியானதால் அந்த மருத்துவர் பணி செய்ய ஓர் ஆண்டு தடை விதித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியை சேர்ந்த கவுரி சங்கர் என்பவரது மனைவி அமுதா (35) தி.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

uda

கடந்த 11.8.2014 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 26ம் திகதியன்று 2வது அறுவை சிகிச்சையும், அடுத்த சில நாட்களில் 3-வது அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அமுதா தொடர்ந்து பலவீனமாக ஆனதால் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் கல்லீரல் உட்பட உடலின் பல பாகங்கள் கெட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்த அமுதாவுக்கு 10 மாதங்களாக டியூப் வழியாக திரவ உணவு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

எனவே, தனியார் மருத்துவமனை மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் அமுதா இறந்தார் என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் பொலிசார் வழக்குப்பதிவு செய்யாத நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் மருத்துவர் மாறன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் கவுரி சங்கர் புகார் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர், மருத்துவர் மாறன் மீதான புகார்களை விசாரித்து, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை உறுதி செய்து மாறன் மருத்துவர் பணி செய்வதற்கு தடை விதித்து மருத்துவ பதிவேட்டில் இருந்தும் அவரது பெயரை நீக்கியுள்ளது.

1911
-
Rates : 0
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]