புகைப்பழக்கத்தை மறக்க ஏலக்காய் சாப்பிடுங்கள் | www.VijayTamil.Net

புகைப்பழக்கத்தை மறக்க ஏலக்காய் சாப்பிடுங்கள்

Loading...

நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும், அந்த காபி, டீ. இந்த ஏலக்காய் பற்றி சற்று விரிவாக காண்போம்,
Elettaria Cardamomum என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் ஏலக்காய் சமஸ்கிருதத்தில் “ஏலா” என்று அழைக்கப்படுகிறது. முதிர்ந்த ஏலக்காய்களின் உள்ளிருக்கும் விதைகள் (ஏலரிசி) மருத்துவ பயன்கள் கொண்டவை.

cd

ஏலக்காய் பயன்கள்:
1. உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக) சமையலின் நறுமணமாக உள்ளது.
2. ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர், மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
3. தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு, வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக உள்ளது.

மருத்துவ குணங்கள்:

அஜீரணம்:
சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.

வயிற்றுவலி:

அவ்வப்போது வந்து எட்டிப்பார்க்கும் வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.

கர்ப்பக்கால பிரச்சினை:
கர்ப்பிணி பெண்களுக்கு, அந்த கர்ப்பக் காலத்தில் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது உண்டு. இவற்றை போக்க, ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த ஏலரிசியை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை, தேவையான அளவு எலுமிச்சம்பழச்சாற்றில் குழைத்து, உணவு உட்கொண்ட பின்பு சாப்பிட்டு வரவேண்டும்.
தொடர்ச்சியாக ஒருசில நாட்கள் இப்படி உட்கொண்டு வந்தால் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கலாம்.

புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்:
ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் “நிக்கோட்டின்” நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும்.
“ஏலக்காய்” இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.
இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.

209
-
Rates : 0
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]