ஆரோக்கிய இதயத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

Loading...

இதய சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடல் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்கிறது.. ஏனெனில் இருதய அமைப்பில் அடங்கியுள்ள இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உடலை பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமானதாகும். ஆதலால் போதுமான உடற்பயிற்சியும், ஆரோக்கிய உணவுகளும் இதய பாதுகாப்பிற்கு அவசியம். இதை கடைபிடித்தால் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
kk20
உணவு கட்டுப்பாடு
உணவு கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மயோ கிளினிக் நிறைவுற்ற மற்றும் கொழுப்பின் எல்லையை பரிந்துரைத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. உயர் இரத்த கொழுப்பின் அளவு காரணமாக தமனியில் உள்ள பிளேக் கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது.

குறைந்த கொழுப்புசத்துள்ள உணவுகளான மீன், கொழுப்பில்லா பால், பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில் வெள்ளைக்கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள், ஃபைபர், போன்றவை இதய பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது.

எடை நிர்வாகம்
தோற்றத்தை கவனத்தில் கொண்டாலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி இதய நோய் மரணத்தை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 64 வயது வரை உள்ளவர்கள் குறிப்பாக எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.. பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பு மற்றும், குறைவான ஹெச்டிஎல், போன்றவை இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதை பராமரிக்க வேண்டும்.

உடற்பயிற்சி
ஆரோக்கிய இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள் வலுவடைகின்றது. நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்றவை ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த வழிகள். தினமும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி, வெகுதொலைவில் இருக்கும் கடை, போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை விட்டு விட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்கு சிறந்த பங்களிப்பாகும்.

வாழ்க்கை முறை
உங்கள் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறையை தேர்வு செய்யுங்கள். அமெரிக்க இதய சங்கம் புகைபிடிப்பது தான் இதய நோயிற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதலாக புகைபிடிப்பதால் நுரையீரல் நோயை ஊக்குவித்து, தடிப்பு ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம், வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி நாள நெளிவு போன்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஆபத்து அறிகுறிகள்
அசெளகரியமான உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும் வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். , மூச்சுத்திணறல், குளிர்ந்த வியர்வை, குமட்டல், இலேசான மயக்கம், போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]