கொழுந்தியாளை திருமணம் செய்வதற்காக மனைவியை கொலை செய்தவர் கைது!

Loading...

கொழுந்தியாளை திருமணம் செய்வதற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள புலவன்விளையை சேர்ந்தவர் டேவிட் சாமுவேல் (வயது 31), பிளம்பர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், எப்சிபாய் (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு டேவிட் சாமுவேல் சொந்த ஊருக்கு வந்தார்.

எப்சிபாய்க்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் உள்ளனர். அவரது தந்தை சில வருடங்கள் முன்பும், தாய் சில மாதங்கள் முன்பும் இறந்துவிட்டனர். இதனால் ஆதரவின்றி தவித்த எப்சிபாயின் தங்கையும், தம்பியும் அக்காளின் வீட்டில் தங்கினர். எப்சிபாயும், அவரது தங்கையும் பி.எஸ்சி. நர்சிங் முடித்திருந்தனர்.

எப்சிபாயின் தங்கை ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். சில வாரங்களாக டேவிட் சாமுவேல் தனது கொழுந்தியாளை தினமும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது, கொழுந்தியாள் மீது இவருக்கு மோகம் ஏற்பட்டது. எனவே, அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதற்காக மனைவியை கொலை செய்யவும் முடிவு செய்தார்.

கடந்த 28-ந்தேதி இரவு கணவன்-மனைவி ஒரு அறையிலும், மற்றவர்கள் வீட்டின் மற்றொரு பகுதியிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை டேவிட் சாமுவேல் தனது கொழுந்தியாளை எழுப்பி, எப்சிபாய் அசைவற்று கிடப்பதாக கூறினார். உடனே அவர் சென்று பார்த்தபோது எப்சிபாய் இறந்து கிடப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்களிடம் டேவிட் சாமுவேல், தனது மனைவி மாரடைப்பில் இறந்ததாக கூறினார். எப்சிபாய் இரவில் நெஞ்சு வலியால் அலறி துடித்ததாகவும், பின்னர் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் அப்படியே இறந்துவிட்டதாகவும் கூறினார்.

ஆனால், இவரது நடவடிக்கை மீது எப்சிபாயின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் எப்சிபாய் மாரடைப்பால் இறக்கவில்லை, கழுத்தில் கயிறால் இறுக்கப்பட்டு மூச்சுகுழாய் உடைந்து இறந்தது தெரியவந்தது.

போலீசார் டேவிட் சாமுவேலை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொழுந்தியாள் மீது கொண்ட மோகத்தில் மனைவியை கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை டேவிட் சாமுவேல் ஒப்புக்கொண்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

4717
-
Rates : 0
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]