சிக்கன் 65 என்றால் | www.VijayTamil.Net

சிக்கன் 65 என்றால்

Loading...

சிக்கன் 65 என்றால் 65 நாள் ஆயுள் கொண்ட கோழியில் இருந்து தயாரிக்கப்பட்டது ஆனா இப்பெல்லாம் 35 – 55 நாளுக்குள் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் …
இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே …
பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப் படும் ‘ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன
நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது.
ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே… அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரிந்துகொள்ளுங்கள்… நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு.
குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-
நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.
ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.
6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.
பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.
பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

1174
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]