05 வகை இட்டலி செய்யும் முறை | www.VijayTamil.Net

05 வகை இட்டலி செய்யும் முறை

Loading...

இட்டலி வார்க்கும் விதம்:
இட்டலிச்சட்டியில் அளவான தண்ணீரைக் கொதிக்கவிடவும். இட்டலித் தட்டின் ஒவ்வொரு குழியிலும் அதற்களவான வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து, விரித்துப் போட்டு, மாவை அளவாக வார்த்து, சட்டியில் வைத்து, மூடி அவியவிடவும், அடுப்பு நன்றாக எரிதல் வேண்டும். ஒரு ஈடு வேகத்திற்கு 10 நிமிடங்கள வரை செல்லும். மூடியிலிருந்து நீர் சொட்டும் சத்தம் கேட்கும்போது, திறந்து சுத்தமான ஈர்க்கினால் இட்டலியை அடிவரை குத்திப் பார்க்கவும். அவிந்திருந்தால் ஈர்க்கில் மா ஒட்டமாட்டாது. அவிந்த இட்டலியை விரலினால் அமுக்கிப் பார்த்தாலும் பதிவு ஏற்படாது. அவிந்த இட்டலிக்கு நயமாத் தண்ணீர் தெளித்து, இறக்கி,துணியுடன் தூக்கி ஒரு தட்டில் கவிழ்த்துப்போட்டு, மேலும் அடிப்பாகத்திற்குச் சிறிது தண்ணீர் தடவி, 2 நிமிடங்களின் பிறகு துணியை எடுத்துவிட்டு, இட்டலியைப் பரிமாறும் தட்டில் அடுக்கி, மூடி வைக்கவும்.
தட்டிலுள்ள குழிகளின் துவாரங்கள் மிகச் சிறியனவாக இருந்தால், துணி போடவேண்டிய அவசியமில்லை. சிறிது நெய் அல்லது நல்லெண்ணெயைக் தடவி, மாவை வார்த்து, அவித்து, வெந்த இட்டலியை 2-3 நிமிடங்கள் ஆறவிட்டு, ஒரு மட்டைக்கத்தியினால் மெதுவாகப் பெயர்ந்து எடுக்கவும்.
2 தட்டுகளுள்ள சட்டியில் அவிக்கும்பொழுது, கீழ்த்தட்டிலுள்ள இட்டிலியில், மேல்தட்டிலிருந்து ஆவி சொட்டி, களியாகிவிடும். அதனைத் தடுகக்க, கீழ்த்தட்டை வார்த்து சட்டியில் வைத்து, பின்னர் சட்டியின் வாயை மூடத்தக்கதாக ஒரு அளவான வெள்ளைத்துணியை அல்லது கடதாசியை விரித்துப்போட்டு, அதன்மேல் மற்றத் தட்டை வார்த்து வைத்து, மூடிடி, அவியவிடவும். சொட்டும் நீரைத் துணி அல்லது கடதாசி உறிங்சிக் கொள்ளும்.
இட்டலியை இளங்சூடாக, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, தேங்காய் சட்னி, சட்னிப்பொடி, அல்லத சாம்பார் ஆகியவற்றுடன் பரிமாறவும்.

149367_606239216148791_5078746860591489061_n

இட்டலிச்சட்டி
சாதாரணமாக இட்டலிச்சட்டியில் 1-2 தட்டுக்களும், ஒரு அமைப்பான மூடியும் உண்டு. ஒவ்வொரு தட்டிலும், 4-5 தூவாரங்கள் உள்ள, 3-4 குழிகள் உண்டு. ஒவ்வொரு குழிக்கும், அதனை மூடக்கூடிய அளவு துணியை நனைத்து, விரித்துப் போட்டு, மாவை வார்த்து, சிறிய தட்டைச் சட்டியின் உள்ளேயும், பெரிய தட்டை வாயின்மேல் பொருந்தவும் வைத்து, மூடி வேகவிடுதல் வேண்டும். இட்டலி அவிப்பதற்கென்றுள்ள இன்னொரு அமைப்பில், நடுவே ஒரு முக்காலித் தாஙிகியின் மீது, ஒரு பலமான தண்டு பொருத்தப்பட்டு, அத்தண்டிலே சம இடைவெளிகளில் கொழுவி விடக்கூடிய 4-5 தட்டுகளுமுண்டு. இத்தட்டுக்களிலுள்ள குழிகளில் சிறுசிறு துவாரங்கள் உண்டு. குழிகளுக்கு நெய் அல்லது நல்லெண்ணெய் பூசி, மாவை வார்த்துத் தண்டில் கொளுவிய பிறகு, முழுவதையும் ஆவியில் வைத்து, மூடி அவித்தல் வேண்டும். இதில் 16 முதல் 20 இட்டலிகளை ஒரு ஈட்டில் வேகவிட்டெடுக்கலாம்.

 
இட்டலி: 01
தேவையான பொருட்கள்:
1 சு. புழுங்கலரிசி(சிறிய வெள்ளை ரகம்)
½ சு.உழுத்தம்பருப்பு
¾ தே.க. வெந்தயம்
11ஃ2-13ஃ4 சு. தண்ணீர்
1 தே.க. உப்புத்தூள்
2 பச்சைமிளகாய், குறுணலாக வெட்டவும்
1 தே.க குநுணலாக வெட்டிய இஞ்சி
செய்முறை:
புழுங்கலரிசியைத் தனியாகவும், உழுத்தம்பருப்பை வெந்தயத்துடனம் கலந்து, றன்றாக கழுவி, 6-8 மணிநேரத்துக்கு குறையாமல் ஊற விட்டு, மறுபடியும் கோதில்லாமல் கழுவி, தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்க. அரிசியை பிளென்டர் அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, ¾ சுண்டுவரை தண்ணீர் விட்டு, பொடி ரவையின் அளவுக்கு இலேசான கரகரப்பாகவும், விழுதுபோலவும் அரைத்து, வழிக்கவும். பின்னர் உழுந்தையும் போட்டு, மிகுதித் தண்ணீரில் சிறிது விட்டு அரைத்து, மொத்தையாக வந்தவுடன், மேலும் தண்ணீரைச் சிறிது சிறிதாக தெளித்து, றைஸாகப் பொங்கப் பொங்க அரைத்து, வழித்து, அரைத்து வைத்துள்ள அரிசிமாவில் போட்டு, மிகுதித் தண்ணிரையும் தேவைப்படி வட்டு, உப்பைப் போட்டு, தடித்த வார்பதமாக கலந்து கொள்க இதை 5 நிமிடங்களாவது நன்றாக அடித்துக் கரைத்து, வெக்கையுள்ள இடத்தில்(செய்முறை 4 ஜப் பார்க்க) மூடிவைத்து, 12-14 மணிநேரம் புளிக்க விடவும். புளிக்கும்போது மா நன்றாகப் பொங்கிக் கொள்ளுமாதலால், வழியாமல் இருப்பதற்கு, பாத்திரத்தில் அரைவாசிக்குத்தூன் இருத்தல் வேண்டும். மாவை வார்ப்பதற்கு முன்னர், வெட்டிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை தூவி, ஒரு கரண்டியினால் மெதுவாக 2-3 தரம் துழாவிக் கலந்து, வெய்முறை 16 என்பதில் கொடுத்துள்ள படி இட்டலியை வார்த்து, அவித்தெடுக்கவும், பச்சை மிளகாய், இங்சி என்பவற்றிற்கு பதிலாக, ½ தேக்கரண்டி மிளகு, ½ தேக்கரண்டி நற்சீரகம் என்பவற்றை அருவல் நொருவலாக உடைத்துப் போட்டுக் கலந்தாலும் வாசனையாகவிருக்கும்.
இட்டலி 02
தேவையான பொருட்கள்:
1 சுண்டு புழுங்கலரிசி நொய்
½ சுண்டு உழுத்தம்பருப்பு
¾ தேக்கரண்டி வெந்தயம்
1 தேக்கரண்டி உப்புத்தூள்
தண்ணீர்
செய்முறை:
புழுங்கலரிசி நொய்யைத் தண்ணீர் விட்டுத் தொய்ந்த பதத்தில் பிசைந்து ஊறவிடவும். உழுத்தம்பருப்பை வெந்தயத்துடன் போட்டு, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, கழுவி, வடித்து, செய்முறை 15 இல் கொடுத்துள்ளபடி, நைஸாகப் பொங்கப்பொங்க அரைத்து, வழித்து, பிசைந்த மாவில் போட்டு, உப்பையும் போட்டு, தடித்த வார்பதமாக கலந்து கொள்க. இதை ஐந்து நிமிடங்களாவது நன்றாக அடித்துக் கரைத்து, வெக்கையுள்ள இடத்தில் (செ.மு 4ஐப் பார்க்க) மூடிவைத்து, 12-14 மணி நேரம் புளிக்கவிடவும். பின்னர் செய்முறை 16 என்பதில் கொடுத்துள்ளபடி இட்டலியை அவித்தெடுக்கவும். இட்டலி 1 ஐப் போலவே இதனையும் பரிமாறவும்.
நல்லரக, சிறிய வெள்ளைப் புழுங்கலரிசியை நன்றாகக் கழுவி, 15 நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்து, வடித்து, ஒரு துணியின்மீது பரவி, நிழலில் வைத்து நன்றாக காயவிட்டு, மில்லிலே பொடி ரவை(நொய்) போன்ற மாவாக உடைத்தெடுக்கவும். இதனை அடைத்து வைத்து, வேண்டிய வேளைகளில் இட்டலிக்கு உபயோகிக்கலாம்.
பச்சை அரிசி இட்டலி:
தேவையான பொருட்கள்:
½ சுண்டு உழுத்தம்பருப்பு
½ தேக்கரண்டி வெந்தயம்
1 சுண்டு பச்சையரி, சிறிய வெள்ளை ரகம்
கொதிக்கும் நீர்
1 தேக்கரண்டி உப்புத்தூள்
செய்முறை:
உழுத்தம்பருப்பை வெந்தயத்துடன் 6-8 மணிநேரம் ஊறவிட்டு, செய்முறை 15 இல் பொடுத்துள்ளபடி, நைஸாகப் பொங்கப்பொங்க இரைத்து, வழிக்கவும், பச்சை அரிசியைக் கழுவி, ஒட்ட வடித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, கொதிக்கும் நீரை நிறையவிட்டு, மூடிவிடவும். ஆறிய பின்னர், அரிவியை வடித்து, இறுக்கமாகவும், பொடிரவையின் அளவுக்கு இலேசான கரகரப்பாகவும் அரைத்து, அரைத்து வைத்த உழுந்தில் போட்டு, உப்பையும் போட்டு, தடித்த வார்பதமாக கலந்து கொள்ள. இதனையும் 5 நிமிடங்களாவது நன்றாக அடித்துக் கரைத்து வெக்கையுள்ள இடத்தில் (செ.மு 4 ஐப் பார்க்க) மூடிவைத்து, 12-14 மணி நேரம் புளிக்கவிடவும், பிறகு செய்முறை 16 என்பதில் கொடுத்துள்ளபடி இட்டலியை அவித்தெடுக்கவும்.

ரவை இட்டலி:
தேவையான பொருட்கள்:
1 சுண்டு ரவை
½ சுண்டு உழுத்தம்பருப்பு
½ தேக்கரண்டி மிளகு, உடைத்துப்போடவும்
½ தேக்கரண்டி நற்சீரகம், உடைத்துப்போடவும்
கருவேப்பிலை, கிழித்துப்போடவும்.
1 தேக்கரண்டி உப்புத்தூள்
செய்முறை:
ரவையைச் சுத்தமாக்கி, ஆவியில் வைத்து நன்றாக அவித்தெடுத்து, அல்லது நிறம் மாறாமால் நன்றாக வறுத்து, கட்டியில்லாமல் பரவி ஆற விடவும். உழுத்தம்பருப்பை 2½-3 மணிநேரத்துக்கு குறையாமல் ஊற விட்டு, செய்முறை 15 இல் கொடுத்துள்ளபடி, நைஸாகப் பொங்கப் பொங்க அரைத்து, வழித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அவித்த ரவை, அளவான தண்ணீர், உப்பு என்பவற்றுடன் தடித்த வார்பதமாக கலந்து கொள்க. இதை 5 நிமிடங்கள் வரை நன்றாக அடித்துக் கலந்து, வெக்கையுள்ள இடத்தில் மூடி வைத்து 12-14 மணிநேரம் புளிக்கவிடவும், பின்னர் மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை மெதுவாகத்தூவி கலந்து, செய்முறை 16 இல் உள்ளபடி இட்டலியை அவித்தெடுக்கவும்.

ரவை இட்டலி.02
தேவையான பொருட்கள்:
1 சுண்டு ரவை
2 மே.கரண்டி நெய்
½ சுண்டு புளித்த கட்டித்தயிர், மசிக்கவும்
10 முந்திரிப்பருப்பு, துண்டுகளாக ஒடிக்கவும்
4 பச்சை மிளகாய், குறுணலாக வெட்டவும்
½ தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி குண்டுமணியளவு பால்பெருங்காயம், தண்ணீரில் கரைக்கவும்
½ தேக்கரண்டி குறுணலாக வெட்டிய இஞ்சி
கருவேப்பிலை, கிழித்துப்போடவும்.
1 தேக்கரண்டி உப்புத்தூள்
½ சுண்டு மிருதுவான தேங்காய்த் துருவல்
தண்ணீர்
செய்முறை:
தாச்சியில் ஒரு தேக்கரண்டி நெய்யைக் காயவிட்டு, ரவையைப்போட்டுச் சிவக்க வறுத்திறக்கி, ஆறவிடவும். மீதி நெய்யைக் காயவிட்டு கடுகைப் போட்டு வெடிக்கவிட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, முந்திரிப்பருப்பு என்பவற்றைப் போட்டுச் சிறிது வதக்கி இறக்கி, தயிரில் போட்டு, உப்பு, பெருங்காயம், தேங்காய்த்துருவல் ஆகியவற்றையும், கடைசியாக, வறுத்த ரவையையும் போட்டுக் கலந்து கொள்க. இட்டலித் தட்டில், துணிக்குப் பதிலாக வாழையிலைத்துண்டுகளை அளவாக வெட்டி, வாட்டிப் போட்டு, சிறிது நெய் பூசி ஆயத்தமாக்கி வைத்துக் கொண்டு, சட்டியில் தண்ணீரைக் கொதிக்கவிடவும், கரந்த ரவையில் ஒரு ஈட்டுக்கு அளவானதை வேறாக எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு, தடித்த வார்பதமாக கலந்து, ஊறவிடாமல், உடனே வார்த்து, மூடி, வேகவிட்டு இறக்கவும், பிறகு மற்ற ஈட்டைத் தண்ணீர் விட்டுக் கலந்து, ஊறவிடாமல், வார்த்து, மூடி, வேகவிட்டு எடுக்கவும்.

6709
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]