முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்! | www.VijayTamil.Net

முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்!

Loading...

முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும்.

‘முடி வளருதோ இல்லியோ… இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்ற மனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. விளைவு, ஆளாளுக்குச் சொல்லும் ஷாம்பு, எண்ணெய், தைலங்களை வாங்கித் தலையில் கொட்டி, இருக்கும் முடிக்கு வேட்டு வைக்கின்றனர். நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்… இருக்கும் முடியை தக்கவைக்கலாம்… வளர்ச்சியைக் கூட்டி, உறுதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கலாம்’ என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

��
முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச் சத்தும், புரதச் சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரையைச் சேர்க்கும்போது இந்தச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்துவிடுகின்றன. எனவே, தினமும் இதில் ஏதேனும் ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

��
பேரீச்சம், உலர் திராட்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி… போன்ற பழங்கள் முடி உதிர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தருகின்றன.

��
வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து, பனை வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம்.

��
பாசிப் பருப்பில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கட்டிய பாசி பயிறு முடியின் வேர்க்கால்களை வலுபடுத்தும்.

��
பெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகள் என வாரம் தவறாமல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கவேண்டும். கூந்தலை சீவி பிண்ணுவதன் மூலம் முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.

��
முடி ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சில தைலங்களைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தத் தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். தலைக்கு ஷாம்புவுக்குப் பதில் அரைத்த சீயக்காய் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை பயத்தமாவு அல்லது கடலை மாவால் குளிப்பாட்டலாம்.

கருகருவென முடி அடர்த்தியாக வளர கை கொடுக்கும். முடி கொட்டுவதும் நீங்கும். இளநரையும் வராது” என்கிற வேலாயுதம், வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள, சில மூலிகை தைலங்களைச் சொன்னார்.


பஞ்ச கர்ப்பம் தைலம்

தேவையானவை:

50 கிராம் கடுக்காய், சிறிது வேப்பிலை.
கால் டீஸ்பூன் வெள்ளை மிளகு
கரிசிலாங்கண்ணி கரை சாறு – 10 கிராம்
நல்லெண்ணெய் அரை லிட்டர்

செய்முறை:

கடுக்காயை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். மேலே சொன்ன பொருட்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். ‘சடசட’ வென ஓசை வந்ததும் இறக்கி, ஆற வைக்க வேண்டும்.

குளிக்கும்போது இந்தத் தைலத்தை மிதமாகச் சூடு செய்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்கவேண்டும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும்!


கரிசாலைத் தைலம்

தேவையாவை:

கரிசலாங்கண்ணி இலை சாறு – 50 மி.லி.
நல்லெண்ணெய் 50 மி.லி.
வெந்தயம் – 50 கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய் கலந்துகொள்ள வேண்டும். அதனுடன் வெந்தயத்தை வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை நீர் வற்றும் வரை காய்ச்சி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.


நெல்லி தைலம்

தேவையாவை:
நெல்லி சாறு 50 மி.லி.,
மருதாணி சாறு 50 மி.லி.,
அரைக்கீரை விதை 50 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்

செய்முறை: நெல்லிசாறுடன், மருதாணி சாறைக் கலந்து அதில் அரைக் கீரை விதையைச் சேர்க்க வேண்டும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு நீர் வற்றி வாசனை வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.


அவுரி தைலம்

தேவையானவை:

அவுரி இலைச் சாறு 250 மி.லி.,
நெல்லிச் சாறு 100 மி.லி.,
நல்லெண்ணெய் அரைக் கிலோ

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அவுரி, நெல்லிச் சாறு கலந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து நீர் வற்றும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.

��
முடி கொட்டுவதை தடுக்க

��
முட்டை வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சிகைக்காய் போட்டு குளித்தால், தலைமுடி உதிர்வது நின்று விடும்.

��
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து தேய்த்து வந்தால் முடி உதிராது.

��
முடி நன்றாக வளர, சோற்றுக் கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது. மேலும், முடி அடர்த்தியாக வளர்வதோடு, தலையும், கண்களும் குளிர்ச்சியாகும்.

��
சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

��
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி அடர்த்தியாகி, கருமையாக மாறும்.

��
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்- ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து, தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

��
வெந்தயத்தை ஊற வைத்து, நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு, தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.


ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி தலா, 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும். அத்துடன் தலை முடியும் அடர்த்தியாக வளரும்.

1994
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]