நடிகை நமீதா 18 கிலோ எடை குறைந்தார் 94 கிலோவாக இருந்தவர் 76 கிலோவாக மாறினார் | www.VijayTamil.Net

நடிகை நமீதா 18 கிலோ எடை குறைந்தார் 94 கிலோவாக இருந்தவர் 76 கிலோவாக மாறினார்

Loading...

சென்னை,

நடிகை நமீதா சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கணிசமாக குறைத்துக்கொண்டார். 94 கிலோவாக இருந்த அவர், 76 கிலோவாக மாறினார்.

நமீதா

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், நமீதா. கடந்த 13 வருடங்களில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்து 2010-ம் ஆண்டில் ‘இளைஞன்’ என்ற தமிழ்ப்படம் வெளியானது.

அதன்பிறகு, அவருடைய உடல் எடை திடீரென்று அதிகமானது. இதனால் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. உடல் எடையை குறைப்பதற்கு அவர் எவ்வளவோ முயன்றார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க மேற்கொண்ட அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. நாளுக்குநாள் குண்டாகிக்கொண்டே போனார்.

எடை குறைந்தார்

இப்போது நமீதா நவீன சிகிச்சை மூலம் தனது உடல் எடையை குறைத்துக்கொண்டார். 94 கிலோவாக இருந்த அவர், இப்போது 76 கிலோவாக குறைந்திருக்கிறார்.

இதுபற்றி அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

“நான் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடமாட்டேன். அதற்குப்பதில், பீட்சா, ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுவேன். என் உடல் எடை கூடியதற்கு அவைதான் காரணம் என்று கருதுகிறேன்.

உடல் எடையை குறைப்பதற்கு நவீன சிகிச்சை மையம் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றேன். 1½ மணி நேரத்தில் 1½ கிலோ எடை குறைந்தேன். அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பயிற்சியை மே மாதம் வரை தொடர்ந்தேன். அதன் விளைவு 18 கிலோ எடை குறைந்திருக்கிறேன்.

தொடர்ந்து பயிற்சிகள்

நான் இப்போது அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதற்காக இன்னும் 8 கிலோ எடை குறையவேண்டும். தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருகிறேன். இப்போது நான் அரிசி உணவு எதுவும் எடுத்துக்கொள்வதில்லை. டீ, காபி அருந்துவதில்லை. என்னை பாதித்த மனஅழுத்தமும் குறைந்துவிட்டது”.

இவ்வாறு நமீதா கூறினார்.

அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நமீதா அளித்த பதில்களும் வருமாறு:-

நிறைய மச்சான்கள்

கேள்வி:- படவாய்ப்புகள் இல்லையென்றால், மற்ற கதாநாயகிகள் சொந்த ஊருக்கு பறந்திருப்பார்கள். கடந்த 5 வருடங்களாக உங்களுக்கு படவாய்ப்புகள் இல்லையென்றாலும், சென்னையைவிட்டு போகவில்லையே ஏன்?

பதில்:- என்மீது அன்புகொண்ட தமிழ் மக்கள்தான் காரணம். எனக்கு இங்கு நிறைய மச்சான்கள் இருக்கிறார்கள். அவர்களைவிட்டு நான் போகமுடியாது. என் வாழ்க்கை முழுவதும் தமிழ்நாடு என்று ஆகிவிட்டது. வடஇந்திய பண்டிகைகள் எனக்கு மறந்துபோய்விட்டன. பொங்கல், தீபாவளி தான் நினைவில் உள்ளது.

201509031126435421_Actress-Namitha-low-weight-of-18-kg-Was-94-kg-76-kg-turned_SECVPF.gif
அரசியல்

கேள்வி:- திருமணம் பற்றி முடிவு செய்துவிட்டீர்களா?

பதில்:- திருமணத்துக்காக நான் உடல் மெலியவில்லை. படத்தில் நடிப்பதற்காகத்தான் நான் மெலிந்திருக்கிறேன், என்றாலும் நான் திருமணம் செய்துகொள்வேன். ஒரு கோடீஸ்வரரையோ, வசதி படைத்தவரையோ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. எளிமையானவராக இருந்தால் போதும். திருமணத்துக்குப்பின் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வேன்.

கேள்வி:- நீங்கள் அரசியலில் ஈடுபட போவதாக பேச்சு அடிப்பட்டதே?

பதில்:- அரசியல் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது என் ஆசை. இரண்டு கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்றை தேர்வு செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்காக நான் பிரசாரம் செய்வேன்.

4738
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]