கோபம் தரும் மாரடைப்பு | www.VijayTamil.Net

கோபம் தரும் மாரடைப்பு

Loading...

எல்லோருக்கும் கோபம் வரும். இது அனைவருக்கும் இருக்கக் கூடிய இயற்கையான உணர்ச்சி.

ஆனால் இந்த கோபத்தினை எப்படி கையாளுகின்றீர்கள் என்பதை பொருத்துதான், உங்கள் இருதயம் எப்படி இருக்கப் போகின்றது என்பதனை தீர்மானிக்கும்.

kopan

கோபம் உங்களை அழிவுப்பூர்வமான செயல்களுக்கு இழுத்து செல்கின்றது என்றால் உங்களுக்கு மாரடைப்பு ஓடோடி வந்து விடும் என்று பிரபல இருதய நிபுணர் டேவ் மான்ட்கோமெரி (பியட்மான்ட் மருத்துவமனை, அட்லாண்டா) தன் ஆய்வின் முடிவாக கூறியுள்ளார்.
முறையான வழியில் உங்கள் கோபத்தினை வெளிப்படுத்த முடியுமானால் அதுவே உங்கள் ஆரோக்கியத்தின் அறிகுறி என விஞ்ஞானி லாரா க்ப்ஸான்கி ஹார்ட்வார்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் கோபம் இருதயத்தினை பாதிக்கும் என்கின்றோம் கோபம் நமது ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் குறிப்பாக அட்ரினலின், கார்டிசால் இவற்றினை சுரக்கச் செய்து இருதயத் துடிப்பினையும், மூச்சு விடுதலையும் துரிதப்படுத்துகின்றது. நீங்கள் கவனித்துப் பாருங்கள். கோபம் இருக்கும் பொழுது நெஞ்சு படபடக்கும், மூச்சு வாங்கும், வேகம் வரும், ரத்த நாளங்கள் சுருங்கும், ரத்தக் கொதிப்பு கூடும். ஆரோக்கியமானவர்கள் கூட இத்தகு கோபத்திற்கு ஆளாபவர் என்றால் அமைதி யாய் இருப்பவர்களை விட அமைதியற்றவர்கள் 20 சதவீத கூடுதல் இருதய பாதிப்பிற்கு ஆளாவர்.

கோபம் வரும் பொழுது கீழ்கண்டவற்றினை நினைவில் கொள்ளுங்கள்.

1. இந்த பிரச்சினைக்கு இவரே காரணம் என்றாலும் நான் வேறொரு வகையில் இதனைத் தீர்ப்பேன்.

2. இந்தப் பிரச்சினை என்ன 5 வருடமா? 5 மாதமா? 5 மணியா? 5 நிமிடமா? இதற்கு நான் ஏன் என் ஆரோக்கியத்தினைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்.

3. இந்த சில மணித்துளிகள் இப்பிரச்சினையை தள்ளிப் போடுவோம்.

4. கோபப்படுவது வேஸ்ட். ஆக்கப் பூர்வமாக செயல்படுவோம்.

மனிதனுக்கு ஏன் கோபம் வருகின்றது

மன உளைச்சல், பணபற்றாக்குறை, சதாதிட்டு வாங்கிக் கொண்டே இருப்பது, ஏழ்மை, அதிக உழைப்பு, ஏமாற்றம் இவையே கோபத்திற்கு அடிப்படை காரணங்கள் ஆகின்றன.

கோபம் வரும் பொழுது

* கைகால் குறுகுறுப்பு, நடுக்கம் இருக்கும்.
* படபடப்பும், நெஞ்சு இறுகுதலும் இருக்கும்.
* ரத்த அழுத்தம் அதிகமாகும்.
* தலைவலி ஏற்படும்
* முகம் இறுகும்
* சோர்வாய் இருக்கும்

பொதுவாக கோபத்தினைப் பற்றி சில கருத்துகள் உள்ளன.

கேள்வி: ஒருவர் கோபத்தினை அடக்கக் கூடாது. கோபத்தினை உடனே வெளிக்கொட்டி விட வேண்டும். அதுவே ஆரோக்கியம் இது சரியா?

பதில்: கோபத்தினை உள்ளுக்குள்ளேயே அடக்குவது தவறுதான். அதற்காக அதனை அடுத்தவர் மீது கொட்டுவது சரியல்ல. இவ்வாறு செய்வது கோபத்தினை கூட்டும். இதற்கான சில ப்ரத்யேக பயிற்சி முறைகளை பழக வேண்டும்.

கேள்வி: கோபப்படுவதே நான் மரியாதை பெற மற்றும் நான் கேட்டதைபெற உதவும், சரியா?

பதில்: இது முற்றிலும் தவறு. கோபப்படுபவர்களுக்கு நடப்பது எதுவும் அன்போடு நடக்காது. பயத்தோடும், வெறுப்போடுமே நடக்கும். மனித நேயமுடையோருக்கே மரியாதையும், உரியதும் கிடைக்கும்.

கேள்வி: என்னால் முடியவில்லை. கோபத்தை அடக்குவது எளிதான காரியம் அல்ல. இயலாத காரியம் சரியா?

பதில்: இது தவறு. எதனையும் முறைப்படி வெளிப்படுத்துவதுதான் சரி. இயலும் செயலே.

கேள்வி: கோபத்தை அடக்க பயிற்சி அளிக்கப்படுகின்றதா?

பதில்: கோபம் எழுவதன் காரணம் அறிந்து அதனை நீக்க முயற்சி எடுக்க மனம் பழகுவதுதான் அதற்கான பயிற்சியாகும்.

கோபத்தின் வெளிப்பாடுகள்

* தொடர்ந்து இருக்கும் நீண்ட நாள் கோபம் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியினை அழித்து விடும். மனநிலை பாதிக்கப்படும்.

* வெளிவராது உள்ளே மறைக்கப்படும் கோபம் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் நோயாளி ஆகிவிடுவர்.

* தாங்க முடியாது கொப்பளிக்கும் கோபம் ஒருவரால் தாங்க முடியாத மிகப்பெரிய உடல் பாதிப்பில் கொண்டு விடும்.

* தன் மீது தானே ஒருவர் கொள்ளும் கோபம் அவரை எப்பொழுதும் குற்ற உணர்வு கொண்டவராக ஆக்கிவிடும்.

* தவறான முடிவுகளை எடுப்பதனால் ஏற்படும் கோபம், வாழ்வினை வெறுப்படையச் செய்யும்.

* எரிமலை போன்று அடிக்கடி வெடிக்கும் கோபம் ஒருவரை முரடனாக்கி விடும்.

* அதிக இருதய பாதிப்பு அதாவது மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதி கரிக்கும். அடிக்கடி கோபப்படுவது சதா உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்துவதால் மாரடைப்பு எளிதில் ஏற்படும்.

* பக்கவாத பாதிப்பு அதிக கோபப்படுபவர்களுக்கு ஏற்படும். இறப்பு நிகழலாம். கை, கால் அசைவுகள் வெகுவாய் பாதிக்கப்படலாம். மூளை முழு செயல்பாடின்றி பாதிக்கப்படலாம்.

* கோபம் அதிக வயிற்றுப் புண்ணினை ஏற்படுத்தலாம். இப்புண்ணிலிருந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு பெரும் ஆபத்தில் முடியலாம்.

* செரிமானக் கோளாறு, அடிக்கடி வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

* அடிக்கடி நோய் வாய்படுவர்.

* தீராத் தலைவலி பாதிப்பு ஏற்படும்.

* மனச் சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்.

* சருமபாதிப்பு உடையவர்களாக இருப்பர்.

சாலையில் செல்லும் போது குறுக்கே ஒருவர் வந்து எரிச்சல் படுத்துகிறார் குழந்தை சொன்ன பேச்சை கேட்கவில்லை என்றால் ரத்தக் கொதிப்பு கூடுகின்றதா? இப்படி பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த கோபம் உறவுகளைக் கெடுத்து உடம்பினையும் கெடுத்து விடும்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு எளிய வழிகள் இருக்கிறது. கோபம் வரும் நேரத்தில் மவுனமே சிறந்தது. இல்லையெனில் கண்மூடித்தனமான தகாத வார்த்தைகளை கொட்டி விட்டு பிறகு வருத்தப்படுவார்கள்.

* மனம் அமைதிபடும் பொழுது கோபத்திற்கான காரணத்தினை தரமான வார்த்தைகளால் சொல்லுங்கள்.

* கோபம் அதிகப்படும் பொழுது ஏதாவது உடற்பயிற்சியினை செய்யுங்கள். குறைந்தது நடைபயிற்சியாவது செய்யுங்கள்.

* கோபம் இருக்கும் பொழுது சிறிய பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

* என்ன செய்து பிரச்சினையைச் தீர்ப்பது என்பது ஆக்கப்பூர்வான சிந்தனை. கோபத்தில் மேலும் கீழும் குதிப்பது என்பது அழிவுப்பூர்வமான சிந்தனை.

* மனதில் யாரையும் கருவாதீர்கள். இது உங்களை நோயாளி ஆக்கிவிடும்.

* ரிலாக்ஸேஷன் முறைகளை கையாளுங்கள். பாட்டு கேட்பது படிப்பது போன்றவை ரிலாக்ஸேஷன் முறைகள் ஆகும்.

* உதவிப் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளுங்கள் அதில் தவறு இல்லை.

* கோபம் மனிதனின் மிகப் பெரிய பலவீனம் என்பதனை உணருங்கள்.

* நினைவில் கொள்ளுங்கள், கோபப்படுபவரை விட கோபப்படாதவரைக் பார்த்து மக்கள் பயப்படுவர்.

* கோபம் உங்கள் உள்குணங்களை வெளிக்கொண்டு வந்து வெளிச்சம் போட்டு காண்பிக்கும்.

தவறான வார்த்தைகள் பேசுபவர்களையும் கெட்ட வார்த்தைகள் பேசுவர்களையும் இந்த சமுதாயம் மதிப்பு, மரியாதை கொடுப்பதில்லை. இவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காத பொழுது இவர்கள் மனநோயாளியாகவும், பின்னர் ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும் ஆகி விடுகின்றனர். இவர்களை இவர்களே சரி செய்து கொள்ள சில குறிப்புகள்.

* பொது இடங்களில் மற்றவர்கள் மத்தியில் சற்று தவறான வார்த்தைகள் கட்டுப்படாமல் வெளிவரும் என்று நினைத்தால் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். உங்களுக்கு எதைப்பார்த்தால் யாரைப் பார்த்தால் தவறான வார்த்தைகள் வருகின்றதோ, அதனைத் தவிர்த்து விடுங்கள் நீங்கள் பேச நினைக்கும் கெட்ட வார்த்தைகளை ஒரு பேப்பரில் எழுதி சிறிது நேரம் கழித்து அமைதியான பிறகு நீங்களே அதனை படித்துப் பாருங்கள், நீங்கள் வெட்கி உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

* கடும் கோப வார்த்தைகளைத் தவிர்த்து கடுமையற்ற வார்த்தைகளை பழக்கி கொள்ளுங்கள்.

* தவறான வார்த்தைகளை பயன்படுத்தி விட்டால் மன்னிப்பு கேளுங்கள் இது உங்களை திருந்த வைக்கும்.

* தவறான வார்த்தைகளை பேசும் பொழுது இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள் எத்தனை முறை இவ்வாறு நிகழ்ந்தது என்பதனை குறித்த வைத்துக் கொள்ளுங்கள் காலப் போக்கில் இது வெகுவாய் குறைந்திருக்கும்.

* நீங்கள் நல்லபடியாய் நடந்து கொள்ளும் பொழுது உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

* பொறுமை என்பது உங்களின் மிகப் பெரிய ஆயுதம் என்பதனை உணருங்கள்.

தரமற்ற வார்த்தைகளை பேசும் எந்த ஆணையும் ஒரு பெண்ணும் மனதில் மதிக்க மாட்டாள் என்பதனை ஆண் உணர வேண்டும். அவரது தாயார் அவரை பெற்றதற்கு வேதனைப்படுவாள். மனைவி மனவேதனைபடுவாள். மகன் தந்தை என்று சொல்ல வெட்கப்படுவாள்.

* பேசும் பொழுதே அதிகாரத் தோரணையில், கடுமையாக பேசுவதனையும் பிறரின் தனிப்பட்ட விஷயங்களை கேட்பவர்களையும் யாரும் விரும்புவதில்லை.

* பொது இடங்களில் மிக சத்தமாக செல்போனில் ஊருக்கே கேட்பது போல் பேசுபவர்கள், சண்டை போடுபவர்கள் இனியாவது மாற வேண்டும்.

* பில் போடும் இடங்களில், பணம் வாங்கும் இடங்களில் அந்த தனிப்பட நபரை அவசரப்படுத்தும் வகையில் குறிக்கில் புகுந்து தன் வேலையே முக்கியம் எனும் நபருக்கு பிறரின் உதவி கிடைக்காது.

* முறையற்ற விதத்தில் ஆடை உடுத்து பவர்களுக்கு மரியாதை குறையும்.

* மாற்றுத் திறனாளிகளிடம் இரக்கம் இன்றி நடப்பவர்களை கொடூரமாக சமுதாயம் பார்க்கும்.

* நன்றி கூற மறப்பவர்களுக்கு அடுத்த முறை உதவி கிடைக்காது.

* எப்பொழுதே தாமதமாக வருபவர்கள் பிறரை அலட்சியப்படுத்துவதாகக் கருதப்படுவர்.

* பிறர் உடன் இருக்கும் பொழுது செல்போனில் செய்தி அனுப்புபவர்கள் மரியாதை தெரியாதவர்கள்.

* தன்னைப்பற்றி மட்டுமே பேசுபவர்களை கண்டால் மற்றவர் ஓடி விடுவர்.

* பிறர் பேசும் பொழுது அதனை குறுக்கிட்டு தானே பேசுபவர்கள் பிறரைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர்கள் ஆவர்.

* தனக்கு மட்டும் சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பவர்கள் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

* எதற்கெடுத்தாலும் வம்பு சண்டை போடு பவர்களுக்கு ஒரு நண்பர் கூட இருக்க மாட்டார்கள்.

இத்தகைய குணமுடையோர்கள் ஏதாவது ஒரு விதத்தில் உடல் நல பாதிப்போடே இருப்பார்கள்.

388
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]