பிறப்பே ஒரு போராட்டம், கஷ்டத்தை கடந்து சாதனை படைத்தவர் கலாபவன் மணி- சிறப்பு பகிர்வு | www.VijayTamil.Net

பிறப்பே ஒரு போராட்டம், கஷ்டத்தை கடந்து சாதனை படைத்தவர் கலாபவன் மணி- சிறப்பு பகிர்வு

Loading...

மலையாள திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது கலாபவன் மணியின் இழப்பு. எந்த ஒரு நடிகருக்கோ, இயக்குனருக்கோ மகனாக பிறந்து இவர் இந்த உயரத்தை அடையவில்லை.மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் 6வது குழந்தையாக பிறந்தவர், அதிலும் குடும்பத்தின் கஷ்டம் காரணமாக இந்த குழந்தை தேவை தானா? என்ற மனநிலையில் இவருடைய பெற்றோர்கள் இவரை பெற்றெடுத்தனர்.இதைத் தொடர்ந்து ஒரு ஆட்டோ ட்ரைவராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், பல மேடைகளின் மிமிக்ரி ஆர்டிஸ்டாக மக்களை கவர்ந்தார். இவரின் திறமை மெல்ல மலையாள சினிமா பக்கம் திரும்ப ஆரம்ப காலத்தில் மிகவும் சிறிய வேடத்தில் தான் நடிக்க வாய்ப்பு வந்தது.ஒரு கட்டத்தில் கோலிவுட் பக்கம் இவர் திரும்ப, விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது விஜயகாந்த் ‘நீ தமிழனா என்று கேட்க’, அவர் ‘இல்லை, ஏன்’ என கேட்டுள்ளார்.

06-14572

அதற்கு கேப்டன் ‘என்னை விட நீ கருப்பா இருக்கியேடா’ என கலகலப்பாக கூறினாராம். மேலும், பாக்கெட்டில் இருந்து ரூ. 150யை விஜயகாந்த் அவருக்கு கொடுக்க, இதை பல பேட்டிகளில் கலாபவன் மணி தெரிவித்துள்ளார்.இவர் இதுநாள் வரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழில் 30 படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, மாதவன், சரத்குமார் என பலருடனும் நடித்து விட்டார்.அதிலும் குறிப்பாக ஜெமினி படத்தில் தேஜா கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். இவரின் மிமிக்கிரியை பார்ப்பதற்காகவே இந்த படத்திற்கு கூட்டம் கூடியது என்றால் மிகையல்ல. மேலும் விக்ரம் நடித்த காசி படத்தின் ஒர்ஜினல் வெர்ஷனை இவர் தான் மலையாளத்தில் நடித்தார். இவர் வெறும் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர்.மகுடத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல Vasantiyum Lakshmiyum Pinne Njanum படத்திற்கு சிறந்த துணை நடிகர் பிரிவில் தேசிய விருதை வென்றார். வாழ்வில் பல கஷ்டங்களை கடந்து இன்று திரைத்துரையில் உச்சத்தில் இருக்கும் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ஒட்டு மொத்த ரசிகர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். அவர் நம்மை விட்டு சென்றாலும், அவரின் படைப்புக்கள் காலம் கடந்து நம்மை கவர்ந்துக்கொண்டே இருக்கும்

1795
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]