மனமடங்க வேண்டும்: – மனதை அடக்கலாம் ! | www.VijayTamil.Net

மனமடங்க வேண்டும்: – மனதை அடக்கலாம் !

Loading...

பலருக்கும் தம் மனதை அடக்க முடியவில்லையே என்ற குறை நிறைய உண்டு. மனம் நிறைய கல்மிஷங்களையும், ஆசைகளையும் வைத்துக் கொண்டு மனமடங்க வேண்டும் மனமடங்க வேண்டும் எனில் எப்படி முடியும்? மனமடங்கும் நாள், யோகசக்திகள் பொங்கும் நாள், காம சக்திகள் இல்லற தர்மத்தை ஒட்டி முறைப்படுத்தப்படும் நாள், பேராசைகள் தணியும் நாள் என அந்தந்த நாளுக்குரிய ஆன்மீகப் பலன்கள், லெளகீகப் பலன்கள் அதாவது வாழ்க்கையை ஒட்டித் தேவையானவற்றைப் பெறுதல் எனவும் உண்டு. எனவே அந்தந்த நாளில் குறித்த வழிபாடுகளை முறையாகக் கடைபிடித்திடில், அந்தந்தக் குறைபாடுகளை வாழ்க்கையில் அவ்வப்போது நிவர்த்தி செய்து வந்திடலாம். இல்லையேல் அந்தந்தக் குறைகள், வினைகளின் வீக்கமாக பலத்து வீங்கி கடுமையான கர்ம வினைகளாகப் பெருத்து அழுத்தும்.

manam

பொதுவாக நெருப்புக்கு அழுக்கு, ஆசை, பற்று, பந்தம் போன்றவற்றையும் மற்றும் தன்னுள் இடப்படும் எதனையும் பஸ்மமாக்கும் யோகாக்னி சக்திகள் பல்வகைகளில் நிறையவே உண்டு. உணவு வகைகள், நெருப்பில் நேரடியாக உஷ்ணத்தைப் பெறாது, பாத்திரங்கள் மூலமாக சூடு பெறுதலும் அக்னி மார்கமாக சாராக்னி வகை ஆகும்.

சுவாசமும் உடலில் ஹோமாக்னிச் சுடரை எழுப்புவதேயாகும். மூச்சுக் காற்றில் உள்ள சூட்டை வைத்து அந்தந்த நாளின் கர்மச் சுமையை அறிதல் முடியும்.

சூரியனும், செவ்வாயும் நெருப்புக் கோளங்கள் ஆயினும் வெவ்வேறு அக்னி சக்திகளைப் பூண்டவை! ஸ்கந்தாஸ்ரீபுராக்னி என்பது கையைச் சுடாது, மிகவும் குளுமையாக இருக்கும் அக்னி வகை ஆகும். சீதளநாயகி (குளிர்ந்த நாயகி) என்ற பராசக்தி அம்ச அம்பிகை இதனைத் தோற்றுவிக்கின்றாள்.

சீதளநாயகி தவம் புரியும் தலங்களில் அருகருகே குளிர் நீர் மற்றும் வெந்நீர் ஊற்றமையும். செவ்வாயன்று இவற்றில் ஸ்ரீசீதளநாயகியின் கருணை வேண்டி நீராடிடில் கன்னிப் பெண்கள் நல்ல திருமண வாழ்வைப் பெற்று, நல்ல சுகப் பிரசவத்துடன் தக்க சந்ததிகள் தோன்றிட உதவும்.

கையில் கற்பூராக்னியைத் தாங்குதல், வயிற்றுக்குள் நெருப்பைச் செலுத்துதல் போன்ற அக்னி வகை சித்திகள் ஸ்கந்தாக்னி, மாருதவீராக்னி, புண்டரீகாட்ச அக்னி போன்ற யோக சக்திகளால் எழுபவையாகும்.

புனிதமான கற்பு என்பதும் சாக்தபுராதி தேவாக்னி வகையைச் சார்ந்தது. கண்ணகியும், சத்தியவான் சாவித்திரியும் நிலைநாட்டி வழிகாட்டும் கற்புத் தன்மையில் பொங்கும் அக்னி மிக மிக சக்தி வாய்ந்தது. அகிலத்தையே பஸ்மப் பிரளயத்தில் மறைத்துப் புனிதப்படுத்த வல்லது.

அக்னிக் கோளமான செவ்வாய் (குஜன்) மங்களாக்னி வகை சக்திகளையும் பூண்டதாகும். எனவேதான் மங்கள வாரம் எனப் போற்றப் பெற்று, பெண்களுக்கான எண்ணெய் நீராட்டு நன்னாளாக வெள்ளி போலமைந்து, செவ்வாய்க் கிழமை பூஜையானது புனிதமான மங்கள, கற்பு, மாங்கல்யபல சக்திகளை அளிக்க வல்லதாகும்.

மேலும் செவ்வாய்க் கிழமைக்கான விசேஷமான ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜையில் எலுமிச்சை உறை தீப வழிபாடும் செவ்வாய்க் கிழமையில் உறையும் மங்களாக்னி சக்திகளை நன்கு உணர்விக்கின்றது.

ஆனால் செவ்வாய்க் கிழமை ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜையைப் பரிபூரணமாக்கும் ஒரு நல்வழி முறையைப் பலரும் அறிவதில்லை! எலுமிச்சை உறை தீபம் சாந்தமாகும் வரை அருகிருந்து ஸ்ரீதுர்க்கை நாமங்களை ஓதி இறைச் சிந்தனையுடன் துலங்குவதுடன், ராகு காலம் முடிந்ததும் ஸ்ரீதுர்க்கை சன்னதியை நன்கு சுத்தப்படுத்தித் தருதலால், ஸ்ரீதுர்க்கை பூஜா பலன்களும் பல்கிப் பெருகி விருத்தி ஆகின்றன.

இத்தகைய மங்களாக்னி சக்திகள் நிறைந்த எத்தனையோ செவ்வாய்க் கிழமைகள் நம் வாழ்வில் வந்து சென்றுள்ளன. இவற்றுள் எத்தனை நாட்களை ஆன்மீகம் செறிந்த வகையில் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என நீங்களே மன ஆய்வு செய்து கொள்ளுங்கள்!

நம் கபாலத்தில் ஒளிப் பரல், ஒலிப் பரல், கணப் பரல், சுடர்ப் பரல், சாந்தப் பரல் என – 27 நட்சத்திரங்கள், 15 வளர்பிறைத் திதிகள், 15 தேய்பிறைத் திதிகள், 27 யோகங்கள், 11 கரணங்கள், 4 (சித்யோக, அமிர்த யோக யோக வகைகள்) – என்ற அளவில் அந்தந்த நாளுக்குரிய 5 வகைப் பஞ்சாங்கக் கால அமைப்பை ஒட்டி எண்ணற்ற வகையில் உள்ள அந்தந்தக் கபாலப் பரல்கள் ஆக்கம் பெறும். இவற்றின் விரிவுகள்தாம் அஷ்டாம்சங்கள், துவாதாம்சங்கள், நவாம்சங்களாக ஜோதிடத்திலும் விரிவு பெறுகின்றன. பரல்பரிச் சுடராக்னிகள் தசமித் திதி கூடும் தேய்பிறைச் செவ்வாயன்று நன்கு பூரிக்கும்.

இவை பொலியும் அக்னியாம்சங்கள் கரி அடுப்பு, விறகு அடுப்பு, (நீலபிருங்காதி வகையிலான) நெல்லிக் காய்த் தைலம் மெழுகு வர்த்தி, மரிக்கொழுந்து மற்றும் மல்லிகை மண ஊதுபத்தி போன்றவையாகும். எனவே இவற்றைப் பயன்படுத்தி அமையும் தீபம், பூஜைகள், உணவு வகைப் படையல் மற்றும் தானம் பரலபரிச் சுடராக்னி சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். இதனால் கிட்டும் பலன்கள் அளப்பரியன. திருஷ்டி தோஷங்களால் அடிக்கடி அடிபடும், நோய்வாய்ப் படும் தோஷ விளைவுகள் தீர உதவும்.

மேலும் பல பெற்றோர்கள் மெலிந்திருத்தல், அழகின்மை, கறுத்திருத்தல், தலைமுடி வளர்த்தி இன்மை – என்றவாறாக எதையேனும் தன் பிள்ளைகளின், பெண்களின் குறைகளாக அறியாமையால் எண்ணி நாள்தோறும் மனதினுள் புலம்பி உள்ளூர அழுது கிடப்பர். ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு அவயமும் அவரவருடைய பூர்வ ஜன்மப் பலாபன்களால் அமைவதே, இதில் வருந்துவதற்கு எதுவுமில்லை.

பெறுதற்கரிய மானுடப் பிறவியையும், ஈடில்லாப் பிள்ளைச் செல்வத்தையும் தந்தமைக்காக இறைவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் நன்றி பிரார்த்தனை உருவாகிடில் இத்தகைய மனக் கவலைகள், கறைகளாகத் தோன்றா. தினமுமே செவ்வாய் ஹோரையில் மரிக் கொழுந்து, மல்லிகைப் பூக்கள், நறுமண தூபங்கள் கொண்டு வழிபட்டு வர, பெற்றோர்களின் மனதை ஆக்கிரமிக்கும் மேற்கண்ட வகையான தேக்க எண்ணங்கள் பஸ்மமாகி நல்ல சாந்த சக்திகள் நிரவிட உதவும்.

514
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]