30 வகை பிரியாணி சமையல் | www.VijayTamil.Net

30 வகை பிரியாணி சமையல்

Loading...

பிரியாணி.. இதன் சுவைக்கு ஈடாக உலகில் வேறெந்த சுவையுமே இல்லைதான்! அரசன் முதல் ஆண்டி வரை அத்தனை பேரையும் கட்டிப் போடுகிற பிரியாணியில் 30 தினம் ஒரு பிரியாணியை செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் உள்ளங்களைக் கொள்ளையிடுங்கள்.
———————————————————————————————– தேங்காய்ப் பால் பிரியாணி தேவையானவை: சீரக சம்பா அரிசி – 2 கப், முதல் தேங்காய்ப் பால் – ஒரு கப், 2, 3-ம் தேங்காய்ப் பால் – 3 கப், பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, தக்காளி, பெரிய வெங்காயம் – தலா 1, எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 2, 3-ம் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரிசியை வேக விடவும். பாதி அளவு வெந்ததும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். —————————————————————————————————————————————– ரிச் மொகல் வெஜிடபிள் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய் – தலா 2, தயிர் – கால் கப், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி – சிறிதளவு, விருப்பப்பட்டால் கேசரி கலர், பால், குங்குமப்பூ – சிறிதளவு, நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ் சேர்ந்த கலவை – ஒன்றரை கப், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை – தலா 1. செய்முறை: அரிசியைக் கழுவி ஊற விடவும். காய்களை நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காய்கறிக் கலவை, புதினா, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தயிர் சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கிய பின் அரிசி, உப்பு, தேவையான தண்ணீரை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் குக்கரில் வெயிட் போட்டு மூடி விடவும். குக்கரில் பிரஷர் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 7 முதல் 10 நிமிடம் வைத்திருந்து இறக்க வும். பரிமாறுவதற்கு முன்பு 2 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

30 வகை பிரியாணி சமையல்

————————————————————————————————————————————————— கோஃப்தா பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம், தக்காளி – தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. கோஃப்தா செய்ய: முந்தைய நாள் இரவே ஊறவைத்த கொண்டைக்கடலை – முக்கால் கப், சோம்பு, நறுக்கிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – அரை மூடி, உப்பு – சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை – 1, ஏலக்காய், கிராம்பு – தலா 2. செய்முறை: ஊறவைத்த கொண்டைக்கடலையுடன் இஞ்சி, சோம்பு, உப்பு, பச்சைமிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கோஃப்தா ரெடி! குக்கரில் நெய், எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, தக்காளி, வெங்காயம், துருவிய இஞ்சி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பொரித்த உருண்டைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் உப்பு, கழுவிய அரிசியை சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, மெதுவாக கிளறவும். குக்கரை மூடி, அடுப்பை சிம்மில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வேக விடவும். மேலாக சிறிது நெய் விட்டு, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும். ——————————————————————————————————————————————————— கீரை புலவு தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பசலைக் கீரை – ஒரு கட்டு, பச்சைமிளகாய் – 4, வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி, பட்டை – தலா சிறிய துண்டு, பூண்டு – 2 பல், நெய்யில் வறுத்த முந்திரி, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: பசலைக் கீரையை நன்றாகக் கழுவி, இஞ்சி, பூண்டு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு சூடாக்கி பட்டை, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, ஊறிய அரிசியை சேர்த்து, அரைத்த கீரை, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். குக்கரை மூடி, குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் சமைக்கவும். முந்திரியைத் தூவி பரிமாறவும். ———————————————————————————————————————————————– வெஜிடபிள் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், கடைந்த தயிர் – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – 2, தக்காளி விழுது – ஒரு கப், நறுக்கிய கேரட், உருளை, பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் கலவை – 2 கப், நெய் – 5 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – கால் கப், பிரியாணி இலை – 2, புதினா, கொத்தமல்லி – தலா கால் கப், உப்பு – தேவையான அளவு. அரைக்க: சிவப்பு மிளகாய் – 5, பச்சைமிளகாய் – 2, ஏலக்காய், கிராம்பு – தலா 2, பட்டை, இஞ்சி – தலா ஒரு சிறிய துண்டு, பூண்டு – 6 பல், முந்திரி – 15. செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு, பிரியாணி இலையைப் போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் காய்கறி கலவை, தயிர், உப்பு சேர்க்கவும். அரிசி, தேவையான தண்ணீர், தேங்காய்ப் பால் விட்டு கொதிக்க விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும், புதினா, கொத்தமல்லி தூவி கிளறி குக்கரை மூடி, ‘சிம்’மில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும். ———————————————————————————————————————————————– டிரை ஃப்ரூட்ஸ் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பிரியாணி இலை – 2, பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, நெய் – 3 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் சேர்ந்த கலவை – கால் கப், குங்குமப்பூ – சிறிதளவு, பால் – கால் கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா பருப்புகளை போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். அரிசி, பால், தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும். அரிசி பாதி அளவு வெந்ததும், குங்குமப்பூ, வறுத்த டிரை ப்ரூட்ஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து லேசாகக் கிளறி, குக்கரை மூடி, சிம்மில் 7 முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிரியாணி இது! ————————————————————————————————————————————————— கார்ன் புலவு தேவையானவை: பாசுமதி அரிசி, வேகவைத்து உதிர்த்த மக்காச்சோளம் – தலா ஒரு கப், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, நெய் – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. அரைத்துக் கொள்ள: வெங்காயம், கிராம்பு – தலா 1, பட்டை, இஞ்சி – சிறிய துண்டுகள், கசகசா – 2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் – 6, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் நெய் விட்டு சூடாக்கி கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து, அரிசி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த சோளம், உப்பு சேர்த்துக் கிளறவும். சுருள வதங்கியவுடன் சாதம் சேர்த்து ஒட்டாமல் கிளறவும். புதினா, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். ————————————————————————————————————————————————– ஹைதராபாத் ஸ்பைசி வெஜ் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் – தலா 2 கப், நறுக்கிய கேரட், பீன்ஸ் – அரை கப், பட்டாணி – கால் கப், நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு – தலா 1, புதினா – அரை கப், கொத்தமல்லி – கால் கப், பச்சைமிளகாய் – 10, எலுமிச்சைச் சாறு – அரை மூடி, இஞ்சி-பூண்டு விழுது -2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு – தலா 2, அன்னாசிப் பூ – 1, எண்ணெய், நெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி ஊறவைக்கவும். புதினா, கொத்தமல்லி, 4 பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். குக்கரில் நெய், எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப் பூ போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், அரைத்த புதினா-கொத்தமல்லி விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மீதமுள்ள பச்சை மிளகாய், காய்கறி கலவை, உப்பு, தேங்காய்ப் பால், தேவையான தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரிசி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் 10 நிமிடம் குக்கரை மூடி வைக்கவும். பிறகு எடுத்துப் பரிமாறவும். ————————————————————————————————————————————————– பெங்காலி கசகசாபாத் தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), சீரகம் – கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் – 3, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: கசகசாவை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். எண்ணெயைக் காய வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த கசகசா விழுது, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதனுடன் அரிசியை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும். ————————————————————————————————————————————————- குடமிளகாய் புலவு
தேவையானவை: அரிசி – ஒரு கப், குடமிளகாய் – 2, வெங்காயம், தக்காளி – தலா 1 (நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய மல்லித்தழை, புதினா – கால் கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து காய்கறிகள் குழைந்து விடாமல் வதக்கி எடுக்கவும். இந்தக் கலவையை வடித்த சாதத்தில் சேர்த்துக் கிளறவும். —————————————————————————————————————————————————— கிரீன் ஆப்பிள் புலவு தேவையானவை: பச்சை ஆப்பிள் – 2, சீரக சம்பா அரிசி – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி -பூண்டு விழுது, நெய் – தலா ஒரு டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். ஆப்பிளை துருவிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். துருவிய ஆப்பிள், உப்பு போட்டு வதக்கி, வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி, புதினா தூவி அலங்கரித்துப் பரிமாறவும். ———————————————————————————————————————————————– உருளைக்கிழங்கு பிரியாணி தேவையானவை: அரிசி – ஒரு கப், பெரிய உருளைக்கிழங்கு – 3, புதினா – ஒரு கட்டு, பச்சைமிளகாய் – 3 (அ) 4, இஞ்சி, பட்டை, கிராம்பு – சிறிதளவு, (விருப்பப்பட்டால்) பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேகவைத்து சதுரம் சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவுடன் பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளித்து, அரைத்த விழுது, உருளைக்கிழங்கு சேர்த்துக் கிளறவும். வடித்த சாதம், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெங்காயத்தை எண்ணெயில் வறுத்து சேர்த்துப் பரிமாறவும். ———————————————————————————————————————————————- தக்காளி-புதினா பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பழுத்த தக்காளி – 4 (நறுக்கிக் கொள்ளவும்), புதினா – 3 (அ) 4 கட்டு (இலைகளாக உதிர்த்துக் கொள்ளவும்), இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி ஊற விடவும். தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், புதினாவைப் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, தக்காளிச் சாறு, உப்பு, தண்ணீர் விட்டு, கொதித்ததும் அரிசியைப் போடவும். அரிசி பாதி அளவு வெந்ததும், குக்கரை மூடி, குறைந்த தீயில் 7 (அ) 10 நிமிடம் வரை வைத்து எடுக்கவும். ———————————————————————————————————————————————– புரொட்டீன் ரிச் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், ராஜ்மா, பச்சை வேர்க்கடலை – தலா கால் கப், தக்காளி, வெங்காயம் – தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை -1, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, தக்காளி, வெங்காயம், இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வேர்க்கடலை, ராஜ்மா, அரிசி, உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கலந்து குக்கரை மூடி வேக விடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும். ———————————————————————————————————————————————- ஸ்பிரிங் ஆனியன் புலவு தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், தக்காளி – 1 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 1, ஸ்பிரிங் ஆனியன் – 7 (அ) 10 (பொடியாக நறுக்கவும்), புதினா – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை போட்டுத் தாளித்து தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வடித்த சாதம், பொடியாக நறுக்கிய புதினாவை சேர்த்துக் கிளறி இறக்கவும். ————————————————————————————————————————————————— பட்டர் மஷ்ரூம் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பட்டன் காளான் – ஒரு பாக்கெட், தக்காளி, வெங்காயம் – தலா 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 1, பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 1, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி – கால் கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி ஊற விடவும். குக்கரில், வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, சுத்தம் செய்த காளான் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். உப்பு, அரிசி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடவும். பிரஷர் வந்தவுடன் குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். ——————————————————————————————————————————————– காஷ்மீரி வெஜ் புலவு தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பிரியாணி இலை – 1, ஏலக்காய், கிராம்பு – தலா 2, பட்டை – சிறிய துண்டு, கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் – தலா கால் கப், வெங்காயம் – 2 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், தனியாத்தூள், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பாலில் கரைத்த குங்குமப்பூ – 2 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை மூடி, புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு சூடாக்கி, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாதூள், சீரகத்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி, ஊறிய அரிசி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். பிரஷர் வந்ததும் குறைந்த தீயில் வைத்து 7 நிமிடம் சமைக்கவும். பிரஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து பாலில் கரைத்த குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, எலுமிச்சைச் சாறு, புதினா சேர்த்து லேசாகக் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும். ————————————————————————————————————————————————————- முளைப்பயறு பிரியாணி தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், முளை கட்டிய பயறு – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1 (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். முளைகட்டிய பயறு, கொத்தமல்லி, புதினா, ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். பிரஷர் வந்தவுடன் குறைந்த தீயில் 7 நிமிடம் வைக்கவும். பிரஷர் குறைந்தவுடன் எடுத்துப் பரிமாறவும். முளைப்பயறு பிரியாணி தயார். ———————————————————————————————————————————————————– இன்ஸ்டன்ட் புலவு தேவையானவை: பசுமதி அரிசியில் வடித்த சாதம் – 2 கப், நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி, டர்னிப், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா – தலா கால் கப், கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பட்டை – சிறிய துண்டு, இஞ்சி -பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2 (நறுக்கிக் கொள்ளவும்), கீறிய பச்சைமிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், காய்கறிகள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்க வும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு உப்பு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு காய்களை வேக விடவும். காய்கள் வெந்ததும் வடித்த சாதத் தைப் போட்டு புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும். ———————————————————————————————————————————————————- மைசூர் பருப்பு பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், மைசூர் பருப்பு – முக்கால் கப், வெங்காயம் – 2 (நறுக்கிக் கொள்ளவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், புளித்த கடைந்த தயிர் – அரை கப், புதினா – கால் கப், பட்டை, ஏலக்காய், கிராம்பு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டுத் தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தயிரை விடவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, மைசூர் பருப்பு, அரிசி, புதினா சேர்த்துக் கிளறி குக்கரை மூடவும். பிரஷர் வந்ததும் குறைந்த தீயில் 10 நிமிடம் சமைத்து இறக்கவும். நெய் விட்டுக் கிளறி பரிமாறவும். ———————————————————————————————————————————————————- முள்ளங்கி-பச்சைப் பட்டாணி புலவு தேவையானவை: சீரக சம்பா அரிசி, துருவிய முள்ளங்கி – தலா ஒரு கப், வேக வைத்த பச்சைப் பட்டாணி – கால் கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. அரைக்க: பச்சைமிளகாய் – 2, தக்காளி -1, வெங்காயம் – 1, சோம்பு – ஒரு டீஸ்பூன். செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் துருவிய முள்ளங்கி, உப்பு, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். சுருள வதங்கியதும் வடித்த சாதத்தைச் சேர்த்து கிளறவும். புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும். ————————————————————————————————————————————————- அஸ்ஸாம் மசாலா ரைஸ் தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், நறுக்கிய உருளைக்கிழங்கு (அ) காலி ஃப்ளவர் – ஒரு கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி துருவல் – தலா ஒரு டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு. செய்முறை: குக்கரில் நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி துருவல், உருளைக் கிழங்கைப் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, உப்பு, தேவையான தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். பிறகு அரிசியை சேர்த்து சமைக்கவும். பிரஷர் வந்ததும் குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வைக்கவும். பிரஷர் அடங்கியதும் எடுத்துப் பரிமாறவும். —————————————————————————————————————————————- மேத்தி புலவு தேவையானவை: சீரக சம்பா அரிசி – 2 கப், வெந்தயக்கீரை – ஒரு கப், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் – தலா 1 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 3, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கீரை, பச்சைமிளகாய், இஞ்சி -பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, குக்கரை மூடவும். பிரஷர் அடங்கியதும் குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வரை வைத்து பரிமாறவும். —————————————————————————————————————————————————– முட்டைகோஸ்-சென்னா பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், வேகவைத்த கொண்டைக்கடலை – அரை கப், துருவிய முட்டைகோஸ் – அரை கப், தக்காளி, வெங்காயம் – தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, சோம்பு – ஒரு டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய் – தலா 2, புதினா, கொத்தமல்லி – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைக்கடலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பிறகு உப்பு, தேவையான தண்ணீர் விட்டு, கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியைப் போட்டு குக்கரை மூடவும். பிரஷர் வந்ததும் குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வரை வைக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும். ————————————————————————————————————————————————– பனீர் புலவு தேவையானவை: பாசுமதி அரிசி, பனீர் துண்டுகள் – தலா ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1 (நறுக்கிக் கொள்ளவும்), கீறிய பச்சைமிளகாய் – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, சோம்பு, கிராம்பு, புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியைக் கழுவி, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பனீர் துண்டுகளை சேர்க்கவும். பிறகு வேக வைத்த சாதம், புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்திருந்து, பிறகு பரிமாறவும். ————————————————————————————————————————————————— பட்டர் பீன்ஸ் புலவு தேவையானவை: சீரக சம்பா அரிசி – 2 கப், பட்டர் பீன்ஸ் – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய், பிரியாணி இலை – தலா 1, புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பட்டர் பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு அரிசி, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். பிரஷர் வந்ததும் குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வைத்து எடுத்துப் பரிமாறவும். ————————————————————————————————————————————————————
நான் – வெஜ் பிரியர்களுக்கு மட்டும்..
செட்டிநாடு மட்டன் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி, மட்டன் – தலா அரை கிலோ (மட்டனை துண்டுகளாக்கி தயிரில் ஊறவைக்கவும்), தேங்காய்ப் பால் – 2 கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, வெங்காயம் – 1, தயிர், புதினா-கொத்தமல்லி – தலா கால் கப், பட்டை சிறிய துண்டு, ஏலக்காய் – 1, கிராம்பு, பிரியாணி இலை – தலா 2, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பாசுமதி அரிசியை அரை வேக்காட்டில் வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன், மட்டன் துண்டுகளை சேர்த்துக் கிளறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கிளறவும். இதில் தேவையான உப்பு சேர்த்து தேங்காய்ப் பால் விட்டு வேக வைத்து எடுக்கவும். கறி வெந்து மசாலா கெட்டியாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். பின்பு வாய் அகலமான பாத்திரத்தில் வேக வைத்த சாதம், வெந்த கறிக்கலவையை சேர்த்துக் கிளறவும். இதை குறைந்த தணலில் 15 நிமிடம் நன்கு வைத்து வேக விடவும். வெந்ததும் புதினா தூவி பரிமாறவும். ——————————————————————————————————————————————————-
சிக்கன் புதினா புலவு
தேவையானவை: பாசுமதி அரிசி – 3 கப், சிக்கன் – அரை கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கி தயிரில் போட்டு ஊற விடவும்), புதினா – ஒரு கட்டு (இலைகளாக உதிர்த்துக் கொள்ளவும்), தயிர் – அரை கப், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, தயிரில் ஊற வைத்த கோழித் துண்டுகளையும் சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். இந்தக் கலவை மெதுவாகக் கொதித்து, ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். குக்கரை மூடி, பிரஷர் வந்ததும் வெயிட் போட்டு, தீயைக் குறைத்து 10 நிமிடம் வைக்கவும். பிரஷர் குறைந்தவுடன் சூடாக எடுத்துப் பரிமாறவும். ———————————————————————————————————————————————-
கொத்துக்கறி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், கொத்துக்கறி – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 1, இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், புதினா-மல்லி – கால் கப், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: பட்டை, கிராம்பு, பிரியாணி இலை. செய்முறை: சாதத்தை முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்துக்கறியை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். வேறு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், வேக வைத்த கொத்துக்கறி, உப்பு சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றி வரும்போது சாதம், புதினா, மல்லி சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்த முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும். ——————————————————————————————————————————————
பெங்கால் ஃபிஷ் கோஃப்தா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 4, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம், தக்காளி – தலா 1. இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன், புதினா- சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை. உருண்டைகள் செய்ய: முள் இல்லாத மீன் – அரை கிலோ, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 1, கடலை மாவு (அ) சோளமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: முள்ளில்லாத மீன் துண்டுகளை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, கடலை மாவு சேர்த்து கிளறவும். ஆறியதும் கொத்தமல்லி சேர்த்து உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாய் அகலமான பாத்திரத்தில், எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி, ஊற வைத்த அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். முக்கால் பதத்தில் வெந்ததும், பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகளைப் போட்டு குறைந்த தீயில் வேகவிடவும். வெந்ததும் புதினா, கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

16997
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]