ஆரோக்கியம் தரும் சில ஆசனங்களும் அதை செய்யும் முறைகளும் | www.VijayTamil.Net

ஆரோக்கியம் தரும் சில ஆசனங்களும் அதை செய்யும் முறைகளும்

Loading...

யோகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் இருக்கின்றன.

அவைகள் எல்லாம் மருத்துவங்களாலும் தொடமுடியாத மெய்ஞானத்தால் ஞானிகளும் யோகிகளும் உருவாக்கித் தந்தவையே.

kkk

ஆனாலும், எல்லா ஆசனங்களையுமே ஒரு பயிற்சியாளர் செய்ய வேண்டியதில்லை.

காரணம் ஒரு பயிற்சியே பெரும்பாலான உறுப்புகளுக்கு பயனளிக்கக் கூடியதுதான். உறுப்புகளும் நரம்புகளாலும் ரத்தத்தாலும் இணைக்கப்பட்டவைதான்.

அதனால் ஒரு நாளைக்கு வேறுபட்ட 10 ஆசனங்களை தேர்ந்தெடுத்து செய்தாலே போதும்.

உதாரணத்துக்கு கீழே குறிப்பிட்டுள்ள 11 ஆசனங்களை செய்யலாம்.

பத்ம ஆசனம்
உக்கட ஆசனம்
சர்வங்க ஆசனம்
மயூராசனம்
ஹலா ஆசனம்
புஜங்க ஆசனம்
தனூராசனம்
சக்கராசனம்
அர்த்த சிரசாசனம்
சிரசாசனம்
சவ ஆசனம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் எந்த வேலைக்குச் செல்பவர்களும் தினமும் பயில்வதுக்கு ஏற்ற எளிமையான பயனுள்ள ஆசனங்களாகும்.

பத்ம ஆசனம்

சாதாரணமாக ஆசன நிலையில் அமர்ந்துகொண்டு இரண்டு கல்களுடைய பாதங்களும் மேல் நோக்கியவறு எதிர் தொடைகளில் இருக்கும்படி அமர்ந்துகொள்ளவேண்டும்.

பிறகு இரண்டு கைகளையும் நீட்டி உள்ளங்கைகள் மெல்நோக்கியவாறு கால்முட்டிகளின் மேல் வைதிருக்கவேண்டும்.

பார்வை நேராக விழிகள் திறந்தபடி இருக்க வேண்டும். சுவாசம் சாதாரணமாக இருக்கவேண்டும். இதுவே பத்ம ஆசனம் செய்யும் முறை, இதில் சின்முத்திரை பிடிப்பவர்களும் உண்டு.

பயன்கள்

இந்த ஆசனத்தின் மூலம் உடலின் பெரும்பான்மையான பகுதிகள் பயனடையும் எளிய முறை கை, கால்கள், மார்பு, முதுகுதண்டுவடம், கழுத்து, போன்ற உறுப்புகளுக்கு வலிமை தரக்கூடியது.

சர்வங்க ஆசனம்

போர்வை அல்லது கனமான துணியை நான்கு மடிப்புகளாக கீழே போட்டுக்கொண்டு, அதில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு முச்சை சீராக உள் இழுத்து அடக்கிக்கொண்டு, கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு கால்களையும் மொத்த உடலையும் மெல்ல மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.

தலையும் கழுத்துப்பகுதியையும் தவிர அனைத்து உடற்பகுதியும் மேலெ உயர்ந்திருக்க வேண்டும். இப்போது மூச்சை சீராக வெளியே விடவேண்டும்.

பிறகு அந்த நிலையிலே சுவாசத்தை இயல்பாக வைத்திருக்க வேண்டும். 30 வினாடிகள் இருந்துவிட்டு மீண்டும் மூச்சை உள்ளிழுத்து அடக்கிக்கொண்டு உடலை மெல்ல விரிப்பில் மல்லந்தபடி கடத்த வேண்டும். பிறகு மூச்சை மெல்ல வெளியே விடவேண்டும்.

பயன்கள்

சர்வங்க ஆசனம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பயன் தரக்கூடியது அதனால்தான் அதற்கு அந்த பெயரை வைத்துள்ளனர். இந்த ஆசனத்தில் எல்லா உறுப்புகளும் ஈடுபடுவதால், அவைகள் வலுவடைகின்றன.

மேலே குறிப்பிட்டதுபோல, மற்ற ஆசனங்களையும் அதற்கான நிலைகளில் இருந்து சுவாசங்களை சாதாரண நிலையில் வைத்திருந்து செய்யலாம்.

ஒவ்வொரு பயிற்சி நிலைக்கான படங்களும் யோகாவுக்கான புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும்.

பயில்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

யோகாசனம் செய்பவர்கள் சுகாதரமான இடத்தில் செய்ய வேண்டும்.
டீ, காபி, புகைப்பிடித்தல், மது, மற்றும் எந்தவித போதைப்பழக்கங்களும் இருக்கக் கூடாது.
பட்டினி கிடக்கவும் கூடாது வயிறுமுட்டவும் சாப்பிடக்கூடாது.
இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருந்தால் நெடுந்தூரம் பயணம் செய்தால் அன்று காலை யோகா செய்யக்கூடாது.
சூரியன் வெயில் வருவதற்கு முன் யோகா பயில்வது நல்லது.
எண்ணெய் குளியலை தவிர்க்க வேண்டும்.
சோர்வான நேரங்களில் யோகா செய்யக்கூடாது.
யோகா செய்யும்போது மனமும் உடலும் உற்சாகமாகவும் அதே நேரம் சாந்தமாகவும் இருப்பது நல்லது.
எல்லோரும் யோகா கற்று பயனடைய இந்த யோகா தினத்தில் வாழ்த்துக்கள்.

469
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]