இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு” . | www.VijayTamil.Net

இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு” .

Loading...

a2

a3

வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்ற பழமொழிக்கேற்ப எண்ணெய்க் குளியலை தவறாதவர்களை விட நல்ல எண்ணெய் குளியைத் தவிர்த்தவர்களே அதிகம் டாக்டர்கள் வீட்டில் காணப்படுகின்றனர்.

மற்ற பருப்புகளை விட கொள்ளில் இரும்புச்சத்து அதிகமாக‌ உள்ளது.இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.

முதலில் எள்ளு பற்றிய விபரங்களை காண்போம்.

எள்ளு ஒரு சிறிய செடி. இந்தியாவில் பெருமளவில் பயிரடப்படுகிறது. 1-2 அடி உயரமே வளரும் எள்ளுச் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு வரைதான். மூவகை வர்ணங்களைக் கொண்ட எள் வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தைக் கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ்வெள்ளை விட மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவாக அதன் எண்ணெய்யும் பயன்படுகிறது. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடிய இனிப்புடன், ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது.

# உடலுக்கு நெய்ப்பும் சூடும் தரக் கூடியது.

# உடலை கனக்கச் செய்யும்.

# தோலுக்கும் பற்களுக்கும் கேசங்களுக்கும் உறுதி தரக்கூடியது.

# உறுப்புகளுக்குப் பலமும் சுறுசுறுப்பும் தரும்.

# வேக்காளத்தைக் குறைத்து அசதியைப்போக்கித் தசைகளுக்குப் புத்துயிர் ஊட்ட வல்லது.

# மூளைக்குத் தெளிவைத் தரும்.

# நல்ல பசியைத் தூண்டுவதால் உணவின் அளவு அதிகரித்து இளைத்தவன் புஷ்டியாகிறான்.

# மலக்கட்டை ஏற்படுத்தும்.

# வாயுவால் ஏற்படும் திமிர்ப்பு, விறைப்பு, வலி முதலியவைகளைக் குறைக்கும்.

# எள்ளை தூளாக்கி சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணை கலந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, குடல் வலி இவைகளைப் போக்கும்.

# உடலுக்கு நல்ல தெம்பை தரக்கூடியது.

# வெல்லப்பாகுடன் இதைக்கூட்டி எள்ளுருண்டை, கொழுக்கட்டை முதலிய தின்பண்டங்களை சாப்பிடுவதால் தன்னலம் பாராமல் பிறர்க்காக உழைக்கும் மனப்பான்மை வளரும்.

# மனவெறியை அடக்க வல்லது.

# வாய்ப்புண்ணை ஆற்றுவதற்கு எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வேண்டும்.

# ரத்த மூலத்திலிருந்து ரத்தம் சொட்டுவதை நிறுத்த எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

# மலம் சிக்கலில்லாமல் வெளியாகும்.

# மூல வேதனை, பற்கள் எகிறுகள், தாடை இவைகளில் பலக்குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும் நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பித் துப்புவதாலும் நன்மை பெறுகிறார்கள்.

# மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது.

# சிறுநீரை சுண்டச் செய்வதால் அதிக அளவில் சிறுநீர் வெளியாகும்.

# நோய்வாய்பட்டவர்களுக்கு எள் கலந்த உணவு பல வித நன்மையையும் பலத்தையும் தருகிறது.

# சிறுநீரில் சீழ் அதிக அளவில் வெளியாகும் நபர்களும் எள்ளை உணவில் அதிகமாகச் சேர்க்கலாம்.
.

பெண்களுக்கு உதவும் எள்ளு:

# வயது வந்தும் பூப்படையாத பெண்களும், மாத விடாய் சரியாக ஆகாமல் கடும் வயிற்று வலியால் அவதியுறும் பெண்களுக்கும், தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களுக்கும் எள்ளுடன் கூடிய உணவை உட்கொண்டால் நன்மை பெறுவர்.

# பெண்களின் கர்ப்பப்பையைச் சார்ந்த வறட்சியைப் போக்கி வலியை கண்டிக்கக் கூடியது.

# உதிரச் சிக்கலை போக்க எள்ளை ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

# பனை வெல்லம் எள்ளு கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திய வலி கடுப்பு உதிரச் சிக்கலை நீக்க பெறும் உதவி செய்கின்றன.

.

எள்ளின் எண்ணெய்யும் எள்ளைப் போல சிறந்தது.

# நல்லெண்ணெயை தேய்த்துக் குளிக்க சீக்கிரம் தோலின் வழியே ஊடுருவி கொழுப்பு வியர்வை பித்த கோளங்களின் அழற்சி அயர்வை போக்கி வியர்வையை சரியாக வெளியாக்கி, தசைகளில் தேவையற்ற மலப் பொருள்கள் தங்காமல் அகற்றி தசைகளுக்கு பலமும் தோலுக்கு மென்மையும் நிறத்தையும் மயிர்கால்களுக்குத் திடமும் கேசங்களுக்கு கருமையும் தருவதால் எண்ணெய் குளிக்கு மிகவும் சிறப்பானது.
.

வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்ற பழமொழிக்கேற்ப எண்ணெய்க் குளியலை தவறாதவர்களை விட எண்ணெய் குளியைத் தவிர்த்தவர்களே அதிகம் டாக்டர்கள் வீட்டில் காணப்படுகின்றனர்.

.

இப்போது கொள்ளு பற்றிய விபரங்களை காண்போம்.

கொள்ளு துவர்ப்புச் சுவை, இனிப்புச் சுவை, வறட்சி, உஷ்ண வீர்யம் இவைகளையுடையது. எளிதில் ஜீர்ணமாகும். ஜீரண நிலையில் புளிப்புச் சுவையையும், எரிச்சலையும் தரும். உடலில் ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. மலத்தை கட்டும்.

.

கொள்ளின் மருத்துவ குணம்:

1) மற்ற பருப்புகளை விட கொள்ளில் இரும்புச்சத்து அதிகமாக‌ உள்ளது.இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

2) இது உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.

3) இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை. எனவே கொள்ளை அதிக அளவில் சாப்பிடுவதை விட வெளிப்புற உபயோகத்துக்கு பயன்படுத்தினால் சிறந்த பலனைத்தரும்.

4) கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

5) சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். இரவு முழுவதும் கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்த்து ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் எடுத்து அப்படியே வெறும் வயிற்றில் 1 அல்லது 1 1/2 கிளாஸ் குடிக்கலாம். அந்த தண்ணீரிலேயே அந்த கொள்ளை போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, துவையல் மாதிரியும் சாப்பிடலாம்.

6) ஊறவைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம். ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மிளகு, சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது.

7) கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

8) காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நீரை லேசாக சூடு செய்து குடித்தல் மற்ற வழிகளை விட உடல் இளைக்க அதிகம் உதவும். கொள்ளு தானியத்தை நன்கு பொடித்து புளித்த மோரை சூடாக்கி அதில் குழைத்து கொழுப்பினால் உடல் பருத்த பகுதிகளில் மேலிருந்து கீழாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணிமுதல் ஒரு மணிநேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்க சதை உருகி உடல் இளைத்துவிடும்.

9) கொள்ளுக் கஞ்சியை அருந்துவதால் நாட்பட்ட ஜலதோஷம், மூச்சுத்திணறல், இருமல், மூலம், விக்கல், வயிற்று உப்புசம், கபவாயு, கல்லடைப்பு, போன்ற நோய்களும், வீக்கம் பெருவயிறு போன்ற உபாதைகளும் நீங்கி விடுகின்றன.

1௦) கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

11) கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

12) கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். (நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்) இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

13) குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
.

குறிப்பு:

# கொள்ளை உண்ணும்போது உணவில் அதிகமாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையையும், புலால் உணவையும் தவிர்க்க வேண்டும்.

# கொள்ளை உண்ணும்போது பகல் உறக்கத்தைத் தவிர்த்து உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.

# உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால், முதன் முதலில் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு பிறகு வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற மாதிரி தொடரலாம்.

# என்னதான் இதை சாப்பிட்டாலும் கொஞ்சமாக உடற்பயிற்சியும் தேவை என்பது…எனது உணர்வு பூர்வமான கருத்து.

.

பொடியாக்கி வைத்துக்கொள்ள.

துவரம் பருப்பு – 2 கப்,
கொள்ளு 1/2 கப்,

இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும். நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம் (கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்), உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைத்து பயன்படுத்தவும்.

.

கொள்ளு கஞ்சி செய்முறை:

தேவையான பொருட்கள்:

கொள்ளு,
அரிசி – 200 கிராம்,
சின்னவெங்காயம் -100 கிராம்,
துருவிய தேங்காய் – ஒரு கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
.

தாளிக்க:

சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்,
சீரகம் – ஒரு ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
கருவேப்பிலை தேவைக்கேற்ப‌
.

செய்முறை:

கொள்ளை லேசாக வறுக்கவும், அதை மிக்சியில் ஒரு சுற்று உடைத்து எடுக்கவும். பின்னர் அதைச் சுத்தம் செய்து அரிசியுடன் சேர்த்து கழுவிவிடவும். குக்கரில் போட்டு ஐந்து மடங்கு நீர் விட்டு அத்துடன், சின்ன வெங்காயத்தை உரித்து சின்ன துண்டுகளாக நறுக்கிப் போட்டு துருவிய தேங்காயை சேர்த்து, தேவையான அளவு, உப்புச் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு பொறித்ததும் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியவுடன் கொள்ளுக் கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்கி காலை டிபனாக சாப்பிட சுவையாக இருக்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு சாப்பிடுவது நல்லது.

.

கொள்ளு தொக்கு செய்முறை:

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 4,
பச்சைமிளகாய் – 2,
சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்,
கடுகு + உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்,
கருவேப்பிலை & ஒரு இணுக்கு,
உப்பு – தேவையான அளவு.
.

செய்முறை:

கொள்ளை முதல் நாள் காலையில் நீரில் ஊறவைத்து, அன்று மாலை கழுவி சுத்தம் செய்து நீர் இல்லாமல் வடித்து ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால் மறுநாள் காலையில் முளைவிட்டிருக்கும் அந்தக் கொள்ளை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு + உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலைப் போட்டு நன்கு வதக்கி மசித்த தொக்குவில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி சாதத்தில் போட்டு, சிறிதளவு நல்ல எண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

.

கொள்ளு துவையல் செய்முறை:

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 100 கிராம்,
மிளகாய் வத்தல் – 4,
புளி – நெல்லிக்காய் அளவு,
பூண்டு- 2 பல்,
தேவையான அளவு உப்பு.
.

செய்முறை:

கொள்ளை நன்றாக வறுத்து அத்துடன் மிளகாய் வத்தல், புளி, பூண்டு, உப்புச் சேர்த்து நன்கு அரைத்து துவைலாக சாப்பிடலாம்.

566
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]