மூலிகை மந்திரம் சப்பாத்திக்கள்ளி | www.VijayTamil.Net

மூலிகை மந்திரம் சப்பாத்திக்கள்ளி

Loading...

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இலந்தையின் சிறப்புகள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இலந்தையைப் போலவே இந்த வெயில் காலத்துக்கேற்ற மற்றும் ஓர் அற்புதக்கனிதான் சப்பாத்திக்கள்ளி. வெயிலால் ஏற்படும் களைப்பைப் போக்கக் கூடியது என்பதால் பாலை வனத்தில் பயணம் செய்கிறவர்கள் தங்கள் உணவாகவும், சோர்வை விரட்டவும் சப்பாத்திக்கள்ளியைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் வெயிலின் கொடுமையால் உடல் பெற்ற உஷ்ணத்தைப் போக்கக்கூடியது என்பதற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

hyy
வறண்ட காலமாக இருந்தாலும் சரி… வறண்ட நிலமாக இருந்தாலும் சரி… எவ்வித சூழ்நிலைகளையும் தாங்கி வாழும் திறன் கொண்டது சப்பாத்திக்கள்ளி. முள் வகைச்செடியான சப்பாத்திக்கள்ளி மஞ்சள் நிறமுடைய பெரிய பூக்களைக் கொண்டது. வளர ஆரம்பிக்கும்போது மிகவும் மிருதுவானதாக இருக்கும் இந்த செடி, வளர வளர கெட்டிப்பட்டு விடும். சப்பாத்திக்கள்ளிக்குப் பெருமை சேர்க்கும் அதன் பழங்கள் தின்பதற்குச் சுவைமிக்கது. இரண்டு அல்லது மூன்று அங்குல நீளமுடையதாக வளரும் சப்பாத்திக்கள்ளியின் பழங்கள் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று வெவ்வேறு நிறங்களுடன் அமைந்திருக்கும். சப்பாத்திக்கள்ளியை ஆங்கிலத்தில் Prickly pear cactus என்று குறிப்பிடுகிறார்கள். சப்பாத்திக்கள்ளிப் பழத்தை Tuna cactus fruit என்றும் அழைக்கிறார்கள். Opuntia ficus indica என்பது இதன் தாவரவியல் பெயர் ஆகும். வடமொழியில் நாகபானி, காந்தாரி என்னும் பெயர் களால் குறிப்பிடுவர். தண்ணீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட சப்பாத்திக்கள்ளி நவீன உலகில் நல்ல சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைப்பது என்பது அரிதாகி வருகிறது. இதனால் சுகாதாரமற்ற நீரைக் குடிப்பதால் உலகில் அன்றாடம் ஒரு நிமிடத்துக்கு 15 பேர் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நிலையில் சப்பாத்திக் கள்ளிச்செடி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சப்பாத்திக்கள்ளியின் சதைப் பகுதியைப் பசையாக்கி மாசடைந்த நீரில் கலந்து வைத்துப் பரிசோதித்ததில் நீரில் கலந்திருந்த நச்சுகள், மாசுப் பொருட்கள், நுண்கிருமிகள் அனைத்தும் அடியில் சென்று தங்கி நீர் தெளிவானதை விஞ்ஞானிகள் கண்டிருக்கின்றனர். இதனால் 98% அளவுக்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுபோலவே, சிறிதளவு சப்பாத்திக்கள்ளியை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை சுத்திகரிக்க வேண்டிய நீருடன் கலந்து வைப்பதாலும் மாசுகள் அடியில் தங்கி சுத்தமான, பருகத்தக்க நீர் கிடைக்கும். இது மிகவும் சிக்கனமான, எளிதான நீரைச் சுத்திகரிக்கும் முறையாக விளங்குகிறது.

சப்பாத்திக்கள்ளியின் மருத்துவ குணங்கள் இலைகள் மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும். இதைப் பசையாக்கி மேல் பற்றாகப் பயன்படுத்துவதால் உஷ்ணம், வீக்கம் ஆகியன விலகிப் போகும். சப்பாத்திக்கள்ளியின் பழங்களை நெருப்பிலிட்டு வதக்கிக் கக்குவான் இருமலுக்குக் கொடுக்கக் குணமாகும். சப்பாத்திக்கள்ளியின் பூக்களைப் புதிதாகவோ அல்லது காய வைத்து உலர்த்தியோ வீக்கத்தை வற்றச் செய்வதற்காகவும், ரத்தத்துக்கு உறையும் தன்மையைக் கொடுப்பதற்காகவும் பயன்படுத்தலாம். இதை உள்ளுக்கு மருந்தாகப் பயன் படுத்துவதால் வயிற்றை நோகச்செய்து அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற Irritable Bowel Syndrome உணர்வை மாற்ற முடியும். குடற்
பகுதியில் சேரும் சளித்தன்மையால் ஏற்படும் வலி குணமாகும். சப்பாத்திக்கள்ளியை அமெரிக்கப் பழங்குடியினர் உணவுப் பொருளாகத் தொடர்ச்சியாகவே பயன்படுத்துகின்றனர். Tunas என்னும் ெபயரில் இதன் பழங்கள் பெரும்பாலான கடைகளில் விற்கப் படுகின்றன. சப்பாத்திக்கள்ளியின் கிளைகளையும் மற்ற காய்கறிகளைப்போல உணவுப் பொருளாக விற்கின்றனர். இது சர்க்கரை நோயைத் தணிப்பதற்காகவும், மிகுந்த கொழுப்புச்சத்தைக் கரைப்பதற்காகவும், அதிக மதுவால் ஏற்பட்ட பின்விளைவு களான தலைவலி போன்ற துன்பங்களைத் தணிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வைரஸ் நுண்கிருமிகளைக் கொல்லக்கூடியதாகவும் விளங்குகிறது.

சில ஆய்வுகளின் மூலம் சப்பாத்திக்கள்ளியால் இரண்டாம்நிலை சர்க்கரை என்கிற Type 2 Diabetes நோயாளிகளின் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க இயலும் என தெரிய வந்துள்ளது. சப்பாத்திக்கள்ளி சத்தூட்டமுள்ள உணவாக பயன்படுவதாகவும் ஆய்வுகள் கூறியிருக்கின்றன. அதிகமான நார்ச்சத்து உடையதாகவும், புத்துணர்வு தரும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதாகவும் நவீன ஆய்வுகள் சப்பாத்திக்கள்ளி பற்றி கூறியிருக்கிறது. சப்பாத்திக்கள்ளியை முழுவதுமாகவே உணவுக்குப் பயன்படுத்தலாம். இதனுடைய இலைப்பகுதி, பூக்கள், தண்டுப்பகுதி மற்றும் பழங்கள் ஆகியனவற்றைச் சமைத்தோ அல்லது சாறு பிழிந்தோ உள்ளுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இதை உணவாகப் பயன்படுத்துவதால் கொழுப்புச்சத்து குறைவது மட்டுமின்றி ஜீரண உறுப்புகள் பலம் பெற்று சீராக இயங்க வழியேற்படுகிறது. சில வகைப் புற்றுநோய்கள் வராத வண்ணம் தடைப்படுத்தும் வலிமையும் சப்பாத்திக்கள்ளிக்கு உண்டு. மேலும் மறதி நோயான அல்ஸைமர் நோய்க்கு மருந்தாகவும், அல்ஸைமர் வராமல் தடுக்கும் வல்லமை கொண்டதாகவும் சப்பாத்திக்கள்ளி மருந்தாகி பயன் தருகிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் என பல்வேறு சத்துகளை உள்ளடக்கி மானுடர் ஆரோக்கியத்துக்கு மகத்தான உதவி செய்வதாக உள்ளது. சப்பாத்திக்கள்ளி தரும் ஆரோக்கியம் ஒரு முறை சப்பாத்திக்கள்ளியை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி சத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு கிடைக்கப் பெறுகிறோம்.

அஸ்கார்பிக் அமிலம் என்றழைக்கப்படும் இது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும், ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆவதற்கும் துணை நிற்கிறது. சப்பாத்திக்கள்ளியில் உள்ள கால்சியம் என்கிற சுண்ணாம்புச்சத்தும் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சப்பாத்திக்கள்ளியில் உள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கும், மலச்சிக்கலை நீக்கவும் வகை செய்கிறது. வயிறு உப்புசம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வும் இயலுகிறது. இதனால் குடல் புண், மலக்குடல் புற்று தடுக்கப்படுகிறது. சப்பாத்திக்கள்ளியிலிருந்து பெறப் படும் நார்ச்சத்து உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் கரைத்து வெளியேற்ற வழி செய்கிறது. இதிலுள்ள பொட்டாசியம் சத்து ரத்த ஓட்டத்தை சீர் செய்து ரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் பாதுகாக்கிறது. இதனால் ரத்த நாளங்களின் அடைப்பும் மாரடைப்பு அபாயமும் தடுக்கப்படுகிறது. சப்பாத்திக்கள்ளியில் அதிக அளவிலான Flavonoid, Polyphenol ஆகிய வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை உடலில் தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோய் உண்டாகக் காரணமாகும் நச்சுகளை வெளியேற்றும் பணியில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் புற்று நோய் தவிர்க்கப்படுகிறது. மேலும், இவை சருமத்தினுடைய ஆரோக்கியத்துக்கும், இளமையில் ஏற்படும் முதுமையை தடுப்பதற்கும், கண்களின் பார்வை தெளிவு படுவதற்கும், மூளையின் செயல்பாடுகள் மேம்படுவதற்கும், மறதி நோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவுகின்றன.

சப்பாத்திக்கள்ளி மருந்தாகும் விதம்
* சப்பாத்திக்கள்ளியை பசையாக்கி மேற்பற்றாகப் போட்டு வைப்பதால் மூட்டு வலி, வீக்கம் ஆகியன குணமாகும். காது வலி, பல் வலி ஆகியவற்றுக்கும் இது பயனுள்ளதாய் விளங்கும்.
* சப்பாத்திக்கள்ளியை நன்கு பசையாக்கி சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி கண்ட இடத்தில் மேற்பூச்சாகப் பூசி வைக்க விரைவில் வீக்கம் வற்றும். வலியும் விலகும்.
* சப்பாத்திக்கள்ளியை முட்கள் நீக்கி சுத்திகரித்து பசையாக்கி 20 கிராம் அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர உஷ்ணமாக மலம் வெளியேறுதல் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள் இல்லாமல் போகும்.
* சப்பாத்திக்கள்ளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அல்லது தீநீராகச் செய்து குடிப்பதால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்த்தாரை நோய்கள் பலவும் கட்டுப்படும்.
* சப்பாத்திக்கள்ளியை நெருப்பிலிட்டு சுட்டு உள்ளுக்கு சாப்பிடுவதால் குடல் புண் எனப்படும் அல்சர் விரைவில் குணமாகும்.
* சப்பாத்திக்கள்ளியின் சதைப் பகுதியை வதக்கிச் சிறு பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பதால் சளி மற்றும் ஆஸ்துமா குணமாகும்.
* பாம்பின் விஷத்தையும் தேள், பூரான், எலி, நாய் போன்றவைகளின் கடி விஷத்தையும் போக்கும் மருந்தாக சப்பாத்திக் கள்ளி விளங்குகிறது என்பதும் உண்மை.

இதன் பகுதி சற்று பூமியில் பட்டாலே அங்கு விரைவில் வேர் ஊன்றித் தன்னை விருத்தி செய்து கொள்ளும்
தன்மை உடையது சப்பாத்திக்கள்ளி. அதனாலேயே இது சீக்கிரத்தில் பல்கிப் ெபருகிவிடும். இதன் இலைப்
பகுதி மற்றும் தண்டுப்பகுதிகளில் கொத்துக் கொத்தாக மிகவும் அடர்ந்த, கூரிய முட்கள் அமைந்துள்ளதால்
இதை அழித்து நிலத்தைச் சீர் செய்வது மிகவும் கடினமானதாகும். அதனால் நெருப்பிட்டுக் கொளுத்தியே இதை அழிக்க இயலும். பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உறைவிடமாக இதன் புதர் விளங்கும் என்பதால் எச்சரிக்கையாகக் கையாள்வது அவசியம்.

265
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]