புற்றுநோய்க்குக் காரணமாகும் பதப்படுத்திகள்! | www.VijayTamil.Net

புற்றுநோய்க்குக் காரணமாகும் பதப்படுத்திகள்!

Loading...

உணவும் உயிரும்

இயற்கையாகவே அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறிப்பிட்ட கால அளவுதான் தாங்கும் திறன் இருக்கும். அந்தக் கால அளவைத் தாண்டி விட்டால் அவை கெட்டுப்போய்விடும். ஆகவே, முன்காலத்தில் அந்தந்த பருவங்களில் விளைவதை அந்தந்தப் பருவங்களில் உண்டு வந்தனர். நீண்ட காலம் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும் நிலையில் உப்பு, தேன், எண்ணெய் ஆகியவற்றில் பதப்படுத்தியே பயன்படுத்தி வந்தனர். தேவையை ஒட்டி மட்டுமே உணவுகள் பதப்படுத்தப்பட்ட நிலை இன்று மாறியிருக்கிறது. உணவுப் பொருட்கள் முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டு விட்ட சூழலில், இன்றைக்கு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் பதப்படுத்தப்பட்டுதான் வருகின்றன. அது இயற்கையான முறையில் அல்லாமல் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயனங்களால் பதப்படுத்தப்படுகின்றன என்பதே பெரும் சோகம்.
hhy
இயற்கையிலும் கலக்கப்படும் ரசாயனம்! பதப்படுத்தும் முறை மற்றும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் குறித்து இயற்கை வாழ்வியல் செயற்பாட்டாளர் நாச்சாளிடம் கேட்டோம்… “உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், அதன் நிறம் மற்றும் தன்மை மாறாமல் இருப்பதற்காகவும் பதப்படுத்தப்படுகின்றன. உப்பு, சர்க்கரை, தேன், மஞ்சள், எண்ணெய், எலுமிச்சை ஆகியவற்றாலும், வத்தல் மற்றும் ஊறல் போட்டும் பதப்படும் முறை நம்மிடம் இருந்தது. வெறும் பாலாக மட்டுமே இருந்தால் கெட்டு விடும். பாலைத் தயிராக்கி, அதிலிருந்து வெண்ணெயை எடுத்து, வெண்ணெயை உருக்கி நெய்யாக பயன்படுத்தினோம். இது போன்ற இயற்கை முறையிலான பதப்படுத்தல் பெரும்பாலும் மருந்துப் பொருட்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைக்கோ அது தலைகீழாக மாறிவிட்டது.

உணவுப்பொருளுடனேயே பதப்படுத்தும் ரசாயனத்தையும் கலந்து விடுதல், பாக்கெட்டில் அடைக்கும்போது சில விதமான வாயுக்களை அடைத்தல், நியூக்ளியர் கதிர்வீச்சு மூலம் என இன்றைக்கு மூன்று விதங்களில் உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்படுகின்றன. சோடியம் பென்சாயிட், பென்சாயிக் அமிலம், சோடியம் சார்பேட், பொட்டாசியம் சார்பேட், சோடியம் நைட்ரேட் ஆகிய ரசாயனங்கள் உணவுப்பொருட்களில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் நொதித்தலை கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. ஆகவே, எந்த வித வேதி மாற்றங்களும் நிகழாததால் உணவுப் பொருட்கள் கெடுவதில்லை. இது போன்ற ரசாயனங்கள் உடல் செல்களில் ஃப்ரீ ரேடிக்கலை அதிகப்படுத்துவதால் புற்றுநோயை ஏற்படுத்தவல்லவை. சோடியம் எரிதோர்பேட், சோடியம் டயாசியேட், சூசினிக் அமிலம் ஆகிய ரசாயனங்களும் சில வகையான உணவுப் பொருட்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.

இ.டி.டி.ஏ, சிட்ரிக் அமிலம், மோனாசோடியம் க்ளூட்டமேட் ஆகியவை பதப்படுத்திகளாக இருப்பதோடு, சுவை மற்றும் நறுமணமூட்டிகளாகவும் இருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுப்பொருட்களிலும் சோடியம் பென்சாயிட் பயன்படுத்தப்படுகிறது. இது டி.என்.ஏவை சிதைக்கிறது என கண்டறியப்பட்டிருக்கிறது. மூளைச்சிதைவு மற்றும் ஆஸ்துமாவையும் ஏற்படுத்துகிறது. கோலா வகை குளிர்பானங்களில் சோடியம் பென்சாயிட் பயன்படுத்தப்படுகிறது. இதன் அமில வடிவம்தான் பென்சாயிக். இயற்கையான குளிர்பானங்கள் என்று சொல்லக்கூடிய புட்டியில் அடைத்து விற்கும் நெல்லிக்காய் சாறில் கூட பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியான கார்சினோஜெனை உருவாக்குகிறது. ஒவ்வொரு செல்களிலும் உள்ள டி.என்.ஏவை பாதுகாக்கிற மைக்கோ காம்பிரியாவின் பாதுகாக்கும் பணியைத் தடுக்கிறது.

ப்ரோமேட் உணவில் இருக்கும் சத்துப் பொருட்களை அழித்து விடுவதால் சத்துக் குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன. BhaBht என்கிற ரசாயனத்தை எலிக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில் அவற்றுக்கு புற்றுநோய் வந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. அசைவம், நொறுக்குத்தீனிகள் மற்றும் பேக்கரி ஐட்டங்களில் இந்த ரசாயனம் பிரதான பதப்படுத்தியாகப் பயன்படுத்தப் படுகிறது. மோனோ சோடியம் க்ளூட்டமேட் ரத்தத்தில் இருக்கும் க்ளூட்டமேட் அமில அளவை அதிகரிக்கும். இதன் காரணமாக மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படும். மோனோ க்ளைசரிக் குழந்தை பிறப்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பழங்களைப் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் Sulfites தலைவலி, மூட்டுவலி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் சாக்ரின், சருமம் மற்றும் ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதை அதிகம் உட்கொள்ளப்படும்போது புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

சல்ப்யூரிக் அமிலம் மூலமாக சிட்ரிக் அமிலத்தை செயற்கையாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. பதப்படுத்திகள் சிறுநீரகம், தைராய்டு, கல்லீரல் ஆகியவற்றை முக்கியமாக பாதிக்கிறது. சமீபத்தில் டெல்லியில் பொட்டாசியம் க்ரோமேட் பயன்படுத்திய ரொட்டித்துண்டுகளை பறிமுதல் செய்து தடை செய்தார்கள். நிறைய நாடுகள் மக்களின் நலவாழ்வைக் கருத்தில் கொண்டு பதப்படுத்திகளை தடை செய்திருக்கின்றன. 2010ம் ஆண்டு டேனிஷ் ஸ்டடி மற்றும் 2012ல் நடந்த நார்வேஜியன்ஸ் ஸ்டடி ஆகியவற்றில் பதப்படுத்திகள் ஏ.டி.ஹெச்.டி. எனும் உளவியல் பிரச்னைக்குக் காரணியாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 2007ம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஆய்வறிக்கையும் இதையே கூறுகிறது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் 2012ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பதப்படுத்திகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ரசாயனங்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நகர்வாக இருக்க முடியும். இயற்கையிலேயே சிறந்த பதப்படுத்திகள் இருக்கின்றன. வெங்காயம் ஆகச் சிறந்த பதப்படுத்தி. வெங்காயத்தைக் கொண்டு பதப்படுத்துவதன் மூலம் அது உணவுப் பொருட்களில் உள்ள புற்றுநோயை உற்பத்தி செய்கிற செல்களை அழிக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதயம் தொடர்பான பிரச்னைகளையும் அது தீர்க்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், இயற்கையான பதப்படுத்தியான தேனில் கூட தற்போது ரசாயனப் பதப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான பானம் எனச் சொல்லும் நெல்லிக்காய் சாறில் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் கேனில் விற்கிறார்கள் எனும்போது அது எப்படி இயற்கையானதாக இருக்கும்? அந்தந்த காலத்துக்கு விளைவதை அந்தந்த காலத்தில் உண்டு வாழ்வதுதான் தீர்வு’’ என்கிறார் நாச்சாள். புற்றுநோய் அதிகரிக்கிறது!
ரசாயனப் பதப்படுத்திகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலாஜியிடம் கேட்டோம்.

‘‘உணவைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் ஃப்ரெஷ்ஷானதாக எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது. இரண்டாவது முறையாக கொதிக்க வைத்தலே தவறுதான். அப்படியிருக்கும்போது ரசாயனங்களால் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது கணக்கில்லா நோய்களை அது ஏற்படுத்தும். வயிற்றுப் புண், கிருமித்தொற்று, வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். அமிலங்களை அதிகம் உட்கொள்ளும் போது உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இரைப்பையின் மேற்பகுதியில் தங்கும் அமிலம், இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்குமான இணைப்பை அரித்துத் தளர்த்தி விடுகிறது.

இதனால் எதுக்களித்தல் மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படுகின்றன. பதப்படுத்திகளால் h.pylori எனும் பாக்டீரியா வளர்கிறது. இது வயிற்றின் உட்புறச்சுவர்களை சிதைக்கவல்லது. உடல் பருமனுக்கும் இவை காரணமாக இருக்கின்றன. வயிற்றின் கீழ்பகுதி புற்றுநோய்கள் குறைந்து, தற்போது வயிற்றுக்கு மேற்பகுதியிலான புற்றுநோய் அதிகரித்திருக்கிறது. உணவுப் பொருட்களில் பல்வேறு காரணங்களுக்காக கலக்கப்படும் ரசாயனங்களே இதற்குக் காரணம்’’ என்கிறார் பாலாஜி.

572
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]