மூலிகை மந்திரம் – எருக்கு | www.VijayTamil.Net

மூலிகை மந்திரம் – எருக்கு

Loading...

விநாயகர் வழிபாட்டில் இடம்பிடித்திருப்பது, சாலையோரங்களிலும் காடுகளிலும் சாதாரணமாக வளரக்கூடியது, நாம் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் பல செடிகளில் ஒன்று எருக்கு என்பது பற்றி பலருக்கும் தெரியும். எருக்கிலும் மருத்துவரீதியாக பல்வேறு விஷயங்களும் பயன்பாடுகளும் உண்டு.
tre
இந்தியாவில் பரவலாகக் காணக்கூடிய எருக்கு, மர வகையைச் சார்ந்த ஒரு தாவரம். தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா, இலங்கை போன்ற நாடுகளிலும் எருக்கு அதிகமாகக் காணப்படுகிறது. எருக்கில் இரு வகைகள் உண்டு. இந்த வேறுபாட்டை அதன் பூக்களை வைத்தே அடையாளம் கண்டுகொள்ளலாம். நீலநிறப் பூக்கள் கொண்ட எருக்கு, செடியைப்போல சிறியதாகவும், வெள்ளை நிறப் பூக்களைக் கொண்ட எருக்கு மரத்தைப்போல ஓங்கியும் வளரும். இதனால்தான் கனத்த அடிபாகம் கொண்ட வெள்ளெருக்கின் வேரிலிருந்து வெள்ளெருக்கு விநாயகர் மரச்சிலைகள் செய்கிறார்கள். இந்த நீல நிறப் பூக்கள் கொண்ட எருக்கின் தாவரவியல் பெயர் Calotropis Gigantean. Calotropis Procera என்பது வெள்ளை நிறப்பூக்களைத் தரும் எருக்கின் தாவரப்பெயர்.

பல்வேறு பெயர்களும் காரணங்களும்

தாவரவியல் பெயர்களோடு, வேறு பல பெயர்களையும் கொண்டது எருக்கு. ஆங்கிலத்தில் Madar என்று பொதுவாக அழைக்கிறார்கள். தலையில் கிரீடம் அணிந்தது போன்ற பூக்கள் கொண்டிருக்கும் என்பதால் Crown Flower Plant என்றும், பால் சுரக்கும் தன்மை கொண்டது என்பதால் Milky Shrub Plant என்றும் குறிப்பிடுவதுண்டு. சமஸ்கிருதத்தில் அர்க்கா என்கிறார்கள். அர்க்கா எனும் சொல்லுக்கு சூரியக்கதிர் என்பது பொருள். உலகுக்கு சூரியன் எத்தனை முக்கியமானதோ, அது போல மருத்துவத்தில் எருக்கும் முக்கியம் என்பதே இந்தப் பெயர் சொல்லும் பொருள். இதன் கனிகள் மலைத்தொடர் போன்ற மேடு, பள்ளங்களை உடையது என்பதால், தூல பலா என்றும் அழைப்பதுண்டு. இதன் விதைகள் வெடித்துச் சிதறுவதால் அஸ்போட்டா என்ற வடமொழிப்
பெயராலும் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவத் தன்மைகள்

அறுவகை சுவையில் காரமும் கசப்பும் கலந்த குணம் கொண்டது எருக்கு. இதில் உஷ்ணத் தன்மை மிகுந்துள்ளதால் வாதத்தையும் கபத்தையும் சரி செய்யும். நீலநிறப்பூக்கள் கசப்பும் இனிப்பும் சேர்ந்த சுவை இருப்பதால் பித்த, கப குற்றங்களை சரி செய்யவல்லது. எருக்கம்பால் வாந்தியை உண்டு பண்ணக்கூடியது. வயிற்றுப்போக்கைத் தூண்டக்கூடியது. சரும நோய்களை குணப்படுத்தவல்லது. வயிற்றுப் பொருமல், உப்புசம், கட்டிகள் ஆகியவற்றைக் கரைக்கவல்லது. புற்றுநோய் போக்கும் ஆராய்ச்சியிலும் எருக்குக்கு இடம் உண்டு. எருக்கன் இலை வாதத்தை சமன்படுத்தக்கூடியது. ஜீரண சக்தியை மேம்படுத்தக்கூடியது. ஜீரண உறுப்புகளை சீராக இயங்க வைப்பது. வீக்கத்தைக் கரைக்கச் செய்வது, காயங்களை ஆற்றும் தன்மை உடையது. நமைச்சலை தணிக்கக்கூடியது. சரும நோய்களுக்கு குணம் தரவல்லது. மண்ணீரல் நோய்களைப் போக்கவல்லது.

வயிற்றுப் புழுக்களை வெளியேற்றவல்லது. எருக்கம்பூக்கள் பாலியல் உணர்வைத் தூண்டக் கூடியது, எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையது. பசியைத் தூண்டி ஜீரண உறுப்புகளுக்கும் பலத்தைத் தரவல்லது. வாந்தி, குமட்டல், பசியின்மை ஆகியவற்றைத் தணித்து உணவை ஏற்றுக்கொள்ளச் செய்வது. உமிழ்நீரை அதிகரிக்கச் செய்வது. சுவாசக்கோளாறுகளைச் சீர் செய்யவல்லது. நீல நிறம் கொண்ட எருக்கம் பூக்கள் சரும நோய்களைத் துடைக்கவல்லது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற வல்லது. சீதளத்தை சரி செய்யக்கூடியது. ஆசனவாய் வழியாக வெளியேறும் ரத்தக்கசிவை நிறுத்தவல்லது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. வயிற்று உப்புசம், வயிற்றுக் கட்டிகளை குணமாக்கக்கூடியது. வீக்கத்தைக்குறைக்கும் தன்மையுடையது.

நீலநிறமுடைய எருக்கன் வேர்ப்பட்டை மலமிளக்கியாகவும், இருமலைத் தணிக்கக்கூடியதாகவும் உள்ளது. சளியைப் போக்கக்கூடியது. மலச்சிக்கலை மறையச் செய்கிறது. இலைச் சூரணம், வேர்ப்பட்டை சூரணத்தை உள்ளுக்கு உபயோகிக்கும்போது 1/2 கிராம் முதல் ஒரு கிராமுக்கு உள்ளாக உபயோகப்படுத்துவதும், எருக்கம்பூ சூரணம் ஒரு கிராம் முதல் 2 கிராம் வரையில் உபயோகப்படுத்துவதும் மிகவும் பாதுகாப்பான முறை.

மருத்துவ முறைகள்

விஷப்பாம்பு கடித்துவிட்டால் 2 அல்லது 3 இலைகளை எடுத்து வாயிலிட்டு வெற்றிலை போல் மென்று தின்றுவிட்டு எருக்கின் வேரை எடுத்து நசுக்கி அதனிலிருந்து வருகிற சாற்றை பாம்பு கடித்த இடத்தில் மேற்பூச்சாக பூசி வைப்பதால் பாம்புக்கடி விஷம் இறங்கிப் போகும். சில ஆண்டுகளுக்கு முன்பு
வரையிலும் விஷக்கடிகளை குணமாக்க எருக்கு இலையை வாயில் இட்டு மெல்லும் பழக்கம் இருந்துள்ளது. எருக்கம்பாலை கடிபட்ட காயத்தின் மீது பூசவும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

எருக்கன் இலையை இடித்துச்சாறு எடுத்து 3 முதல் 5 துளி வரை எடுத்துக்கொண்டு அத்துடன் தேன் கலந்து உள்ளுக்குக் கொடுப்பதால் வயிற்றில் இருந்து வேதனை தருகிற வேண்டாத உயிரினங்களான நாக்குப்பூச்சி, கீரிப்பூச்சி, நாடாப்பூச்சி ஆகியன வெளியேறி ஆரோக்கியம் நிலைபெறும்.

எருக்கன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி பழுத்து உடையாமல் பல நாட்களாகத் துன்பம் தந்து வரும் கட்டிகளின் மேல் வைத்துக்கட்டவும். விரைவில் கட்டி பழுத்து உடைந்து உள்ளிருக்கும் நச்சுகள் வெளியேறி விரைவில் கட்டி இருந்த அடையாளம் தெரியாத வகையில் ஆறிவிடும்.

செங்கல்லை நெருப்பில் இட்டு சூடாக்கி அதன்மேல் கல் தெரியாத வகையில் மூன்று முதல் ஐந்து அடுக்குகள் எருக்கன் இலையை அடுக்கி வைத்து அந்த எருக்கன் இலையை அழுத்தியவாறு குதிக்கால் வலி இருப்பவர்கள் காலை சிறிது நேரம் வைத்திருந்தால் குதிக்கால் வலி குணமாகும். சில நாட்கள் தொடர்ந்து இதைச் செய்து வரவேண்டும்.

எருக்கன் இலைகளைப் பறித்து கைப்பிடி அளவுக்கு ஒரு கட்டாகக் கட்டிக்கொண்டு ஒருபுறம் மட்டும் சமமாக இருக்கும்படி வெட்டி, வெட்டிய பகுதியை சட்டியில் விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி பொறுத்துக் கொள்ளும் சூட்டில் நனைத்து மூட்டு வலி, இடுப்பு வலி, நரித்தலை வாதம், இடுப்புப் பிடிப்பு ஆகியவற்றுக்கு ஒத்தடம் கொடுப்பதால் வலி உடனடியாகக் குறைந்துபோகும். இதையே வேப்பெண்ணெயைக் காய வைத்து நனைத்து ஒத்தடம் தர வாத பிரச்னைகள் விலகிப்போகும்.

எருக்கன் இலையை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு ஆறாத நாட்பட்ட அழுகிய புண்களின் மேல் தூவி வைக்க விரைவில் ஆறிவிடும்.

வெள்ளெருக்கன் பூவை சேமித்து 1 பங்கு பூவுக்கு 1/2 பங்கு மிளகும், 1/4 பங்கு லவங்கப்பூவும் (கிராம்பு) சேர்த்து மைய அரைத்து மிளகு அளவு உருட்டி மாத்திரைகளாக நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு தினம் இரண்டு வேளை உள்ளுக்குக் கொடுத்துவர, ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய் குணமாகும். நெஞ்சுச்சளி வெளியேறி சுவாசம் சீர்பெறும்.

வெள்ளெருக்கம் பூக்கள் 125 என்ற எண்ணிக்கையில் எடுத்து அதனோடு ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கப்பூ இவை மூன்றையும் தலா 15 கிராம் சேர்த்து நல்ல பன்னீர் விட்டு அனைத்தையும் அரைத்து மிளகு அளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக்கொண்டு அன்றாடம் இரவு படுக்கும் முன் ஒரு மாத்திரை சாப்பிட்டு சூடான பால் குடித்துவர உடல் வலிமை உண்டாகும்.

எருக்கம்பாலை ஒரு குச்சியில் தொட்டு பல் நோய், பல் சொத்தை, ஈறு வீக்கம் ஆகியவற்றின் மேல் தடவி வர விரைவில் குணம் கிடைக்கும்.

முதிர்ந்த எருக்கஞ்செடியின் பட்டையையும், வேர்ப்பகுதியையும் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு ஒரு நெல் அளவு எடுத்து நீருடன் கலந்து உண்டுவர வாயுத்தொல்லை நீங்கி உடல்நலம் பெருகும். இப்பொடியோடு சிறிது திப்பிலிப் பொடியும் மிளகுப் பொடியும் சேர்த்து உண்டுவர சீதள நோய் குணமாகும்.

வெள்ளெருக்கு வேர்ப்பட்டையை குடிநீராக்கிக் உள்ளுக்குக் கொடுக்க வியர்வையைத் தூண்டி உடல் வெப்பத்தைத் தணிக்கும் குஷ்டநோயைக்
குணப்படுத்தும். வாசகர்கள் முக்கியமாக ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எருக்கு விஷத்தன்மை கொண்ட செடி என்பதால் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உள்ளுக்குள் மருந்தாகப் பயன்படுத்தும்போது மருத்துவரின் ஆலோசனை அவசியம். இல்லாவிட்டால் தேவையற்ற விளைவுகள் உண்டாகக் கூடும்.

530
-
Rates : 0
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]