“S“ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத படிச்சு பாருங்க… | www.VijayTamil.Net

“S“ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத படிச்சு பாருங்க…

Loading...

எண் கணிதத்தின் படி, ‘S’ என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது. இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர். இதுப்போன்று ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசுவாசமானவர்கள்

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். இத்தகையவர்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது. வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர்.

இரக்கமுடையவர்

‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.

நம்பத் தகுந்தவர்

இவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பத் தகுந்தவர்கள். இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சிவசப்படுவார்கள். சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும்.

உணர்வுகளை மறைப்பார்கள்

இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள், தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். இதனாலேயே இவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். ந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.

மிகவும் கவர்ச்சிகரமானவர்கள்

இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக அதிகம் சந்தோஷமும் கொள்வார்கள், துன்பமும் கொள்வார்கள். இவர்களது கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.

வெற்றிகரமான தொழில்

இத்தகையவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதியாகவோ இருப்பர். உறவுகளில் உண்மையாக இருப்பர் ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளாகட்டும், அனைவரிடமும் உண்மையாக இருப்பர்.

3330
-
Rates : 0
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க SHARE செய்யவும்
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]