ஓவியா துணிச்சல், காயத்ரி கலகம், சினேகனின் விஷம்- பிக்பாஸ் மக்களுக்கு சொல்ல வருவது என்ன? | www.VijayTamil.Net

ஓவியா துணிச்சல், காயத்ரி கலகம், சினேகனின் விஷம்- பிக்பாஸ் மக்களுக்கு சொல்ல வருவது என்ன?

Loading...

பிக்பாஸ் வட இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் சர்ச்சைகள் எழவில்லை. ஆனால், நிகழ்ச்சி தொடங்கியதுமே, பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ரொமான்ஸ், சண்டை, கலகம் செய்வது என பல ட்ரெண்ட் அடித்தது.

அதன் காரணமாக இந்த நிகழ்ச்சி 10 சீசனாக தொடர்கின்றது, இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிரபல தொலைக்காட்சி ஒன்றில் TRP குறைந்து காணப்பட்டது.

இதனாலேயே வடக்கில் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழுக்கு கொண்டு வந்தனர். வட இந்தியாவில் சல்மான் கான் என்றால், அவரை மிஞ்சும் ஒரு நபராக இருக்கவேண்டும் என்று கமலை அழைத்து வந்தனர்.

கமலும் தன் அரசியல் பார்வைக்கு இதுவே ஒரு கருவி என களத்தில் குதித்தார் போல, யார் வருவார்கள் என ஆவலுடன் மக்கள் காத்திருக்க, இவர்கள் தானா என போட்டியாளர்களை பார்த்து மக்கள் பெரிதும் ஈர்க்கப்படவில்லை.

ஆனால், நாள் ஆக, ஆக கஞ்சா கருப்பு-பரணியின் மோதல் நிகழ்ச்சி சூடுப்பிடிக்க தோன்றியது. பரணி பற்றி கருப்பு மிக தவறாக பெண்களிடம் சொல்ல, அவரை எல்லோருமே ஒதுக்க ஆரம்பித்தனர்.

அதை தொடர்ந்து கருப்பு அவரை அடிக்க சென்றது பெரும் சர்ச்சையை உருவாக்க மக்களே வாக்களித்து கஞ்சா கருப்புவை வெளியேற்றினர். கஞ்சா கருப்பு வெளியே சென்ற அடுத்த நாளே பரணியை அனைவரும் ஒதுக்கி வெளியேற வைத்தனர்.

பலரும் இது முன் ஏற்பாடு தான், ஹிந்தியில் வருவதை காப்பியடித்து தான் இப்படி செய்கிறார்கள் என கூறுகின்றனர். இது உண்மையாகவே இருந்தாலும், ஒரு சில நாட்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரீப்ட் என்பதே தேவையில்லை.

ஏனெனில் மனிதனின் மனநிலை அப்படி, 10 பேரை ஒரு அறையில் பூட்டி வைத்தால் கண்டிப்பாக ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களின் உண்மையான மனநிலை வெளியே வரும், அப்படி வந்தது தான் தற்போது நாம் பார்த்து வரும் பிரபலங்களின் குணாதிசயங்கள்.

கணேஷ் எல்லோரிடமும் எளிதில் கலந்து பேசுகின்றார். தனக்கு இருக்கும் எந்த ஒரு டீசண்ட் இமேஜையும் விட மறுக்கின்றார். ஆனால், அவரிடம் எல்லோரும் சொல்லும் ஒரு குறை அதிகமாக சாப்பிடுகின்றார் என்பது தான், அதுவும் தொடர்ந்து வையாபுரியே இதை கூறி வருகின்றார்.

சினேகன் தன்னை ஒரு நேர்மையான மனிதராக காட்ட மிகவும் முயற்சி செய்கின்றார். ஆனால், இந்த போட்டியில் முதலில் எலிமினேட் ஆன அனுயா, சினேகனின் கண்களில் பொய் இருப்பதாக கூறினார். அதை கண்கூடாகவே நாம் பார்க்கலாம், அவர் எப்போதும் பலம் எந்தப்பக்கம் உள்ளது அங்கு நின்று தான் பேசுவார்.

இதில் குறிப்பாக சினேகன் காயத்ரிக்கு அதிக ஆதரவு தருவதை எல்லோரும் பார்த்திருப்போம். இதற்கு முக்கிய காரணம் காயத்ரி, சக்தி போன்றோர்கள் திரைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இதில் சக்தி கொஞ்சம் உஷாராக செயல்படுகின்றார், ஆனால், காயத்ரியின் உண்மை முகம் வெளிப்பட்டது தான் ஆச்சரியம்.

தனக்கு மேல் யாரும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் மிக கவனமாக இருப்பார். அதன் காரணமாகவே அதிகம் பேசும் ஜுலியை முதலிலேயே அடக்கினார், நமீதா, ரைஸா என எல்லோரையும் தன் பக்கம் இழுத்து தன்னை ஒரு தலைவியாகவே நினைத்து வாழ்கின்றார். எப்போதும் ஒரு வஞ்சக குணத்துடன் தான் செயல்படுகின்றார். நான் யாரை பற்றியும் பேச மாட்டேன் என கூறி, எப்போதுமே மற்றவர்களை குறைக்கூறிக்கொண்டே இருக்கின்றார். பிக்பாஸ் முடிந்து வெளியே வரும் போது மிகவும் பாதிக்கப்பட போவது காயத்ரியாக தான் இருக்கும்.

அதேபோல் வையாபுரி தான் அங்கு இருப்பதிலேயே அதிக வயதுடையவர். அதன் காரணமாகவே அவர் எல்லோரிடத்திலும் எளிதில் உறவாட முடியவில்லை. நமீதா ஆரம்பத்தில் டாய்லெட் கிளீன் செய்வது, சுத்தமாக இருப்பது என லைக்ஸ் அள்ளினார்.

ஆனால், ஜுலியின் அதிக பிரசங்கித்தனம் அவரை வெறுப்பேற்றியது, இதற்கு ஆயுதமாக எப்போதும் ஜுலியின் மீது எரிந்துவிழும் ஆர்த்தி, காயத்ரியை கூட்டு சேர்த்து அவர் மீது தாக்குதலை தொடங்கினார்.

ஜுலி மிகவும் புத்திசாலி, நம்மை யார் அடிக்க வருகிறார்களோ அவர்கள் காலிலேயே விழுந்தால், சமரசம் ஆகிவிடலாம் என அத்தனை திட்டுகளையும் வாங்கிக்கொண்டு அக்கா…அக்கா என்று சுற்றி வருகின்றார்.

இப்படி பலரும் ஒன்றாக இருக்க, ஆரம்பத்திலிருந்தே This is my Life என்பது போல் சந்தோஷமாக சிறகடித்து பறப்பது ஓவியா மட்டும் தான். ஆரவுடன் கொஞ்சம் ரொமான்ஸ், சினேகனுடன் கொஞ்சம் மோதல், நான் தம் அடிக்க போகிறேன், எனக்கு பழம் வேண்டும் என கேமரா முன் கெஞ்சுவது என்று எப்போதுமே லைக்ஸ் அள்ளினார்.

அழகு, சினிமா நடிகை என்பதை தாண்டி ஓவியா தன் கேரக்டர் மூலம் அனைவரையும் கவர்ந்தார். நான் இப்படித்தான் என இன்று வரை யாருக்காகவும் தன் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் சுற்றி வருகின்றார்.

ஆனால், மற்ற அனைத்து பெண்களுமே ஒன்றிணைந்து ஓவியாவை ஓரங்கட்டி, தூங்க விடாமல், திட்டி டார்ச்சர் செய்தாலும் பரணி போல் அங்கிருந்து வெளியேறாமல் போட்டி போடுகின்றார்.

அந்த குணமே ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே பேவரட்டாக திகழ்கின்றார். என்ன தான் இது ஒரு நிகழ்ச்சி என்றாலும், நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பெண்களின் சுதந்திர வெளிப்பாடாகவே ஓவியா பிக்பாஸில் செயல்படுகின்றார். வெறும் நிகழ்ச்சி என்று ஒதுக்கி வைக்காமல் மனிதர்களின் மனநிலையை இதில் நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால், நீங்கள் கணேஷா, சக்தியா, ஜுலியா, காயத்ரியா, ஓவியாவா? என்பது உங்களுக்கே புரியும்.

101
-
Rates : 0
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க SHARE செய்யவும்
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]