பிரசவத்துக்கு பிறகு… | www.VijayTamil.Net

பிரசவத்துக்கு பிறகு…

Loading...

தாய்மைநிலை என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் பந்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. குழந்தையின் முகத்தை பார்த்தவுடனே தான் பட்ட கஷ்டங்களை மறந்து மகிழ்கிறாள் தாய். ஒட்டுமொத்த குடும்பத்துக்குமே மகிழ்ச்சியை வரவழைக்கும் குழந்தையின் வருகைக்குப் பிறகு உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய மாறுதல்களை எதிர்கொள்கிறாள் பெண். அந்த திடீர் மாற்றங்களை எதிர்கொண்டு வெளிவருகிறவர்கள் மிகச்சிலரே. பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போகிறவர்களாகவே இன்றும் இருக்கின்றனர். பிரசவத்துக்குப் பிறகு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களைச் சொல்லி வழிகாட்டுகிறார் மகப்பேறு மருத்துவர் மஞ்சுளா. பிரசவத்துக்குப் பிறகு மனதளவில் பெண் என்னென்ன மாற்றங்களை எதிர் கொள்கிறாள்? ‘‘குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தை நன்றாக இருக்கிறதா, ஏதேனும் பிரச்னை உள்ளதா, அந்தந்த மாதத்தில் உண்டாகும் முன்னேற்றங்கள் சரியாக உள்ளதா, சரியாக பால் அருந்துவது போன்ற சில தேவையில்லாத பயங்களும் அதிகம் உண்டாகின்றன. அது மட்டுமில்லாமல் குழந்தையை நம்மால் சரியாக வளர்க்க முடியுமா என்பது போன்ற சில அவநம்பிக்கைகளும் ஏற்படுகிறது. பெரும்பாலும் முதல் பிரசவத்தின்போதே இந்த தேவையற்ற சந்தேகங்கள் அதிகம் ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளைக் காண வரும் உறவுகள் கூறும் சில முன்னுக்குப் பின் முரணான அறிவுரைகளாலும் தாய்மார்கள் பெருமளவு குழம்பிவிடுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கிடைக்கும் அனைத்து சேவைகளும், முக்கியத்துவமும் பிரசவத்துக்குப் பிறகு மறைந்துவிடுகிறது. மட்டுமல்லாமல் குழந்தைகளுக்காக விழிப்பது, குழந்தையை சரியாக கவனிக்க, பராமரிக்க வேண்டும் என்கிற சில குழப்பங்களாலும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இவற்றிலிருந்து வெளியே வர குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் அனைத்திலிருந்தும் வெளியே வந்து பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது ஆறு வாரங்களாவது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிரசவத்துக்குப் பின் தாய்மார்களுக்கு அதிகம் தேவைப்படுவது நம்பிக்கை மட்டுமே. அதை அவர்களுக்கு
ஏற்படுத்தினாலே சீக்கிரமே பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.’’ உடல்ரீதியாக என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறாள்?
‘‘உடல் உறுப்புகள் அனைத்திலுமே மாற்றங்கள் ஏற்பட்டாலும் குறிப்பாக இதயத்திலும், ரத்த ஓட்டத்திலும் மாற்றங்கள் பெரிய அளவில் இருக்கும். உதாரணமாக 5 முதல் 5 1/2 லிட்டராக இருந்த ரத்தத்தின் அளவு குழந்தையின் வளர்ச்சிக்கேற்றவாறு 6 முதல் 6 1/2 லிட்டராக அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது அதற்கேற்றவாறு இதயத்தின் வேலையும் அதிகரிக்கும். ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிகழ்வதில்லை. படிப்படியாகவே உயர்கின்றன.

அதேபோல் பிரசவத்துக்குப் பிறகும் இந்த மாற்றங்கள் படிப்படியாகவே குறையும். முதலில் கர்ப்பப்பையானது சுருங்கத் தொடங்கும். அனைத்து உறுப்புகளும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கும். மார்பகங்களில் ஏற்படும் மாற்றமானது கர்ப்பகாலத்தில் மட்டுமல்லாது
பாலூட்டுவது வரை தொடரும்.’’

எடை அதிகரிப்பு பற்றி…
‘‘கர்ப்ப காலத்தில் கூடும் எடை, பிரசவத்துக்குப் பின் தானாகவே குறையத் தொடங்கும். குறிப்பாக, தாய்ப்பால் கொடுக்கும்போது 7 முதல் 8 கிலோ வரை எடைக் குறைவு ஏற்படுகிறது. இதன்மூலம் படிப்படியாக குறைந்து அவர்கள் பழைய நிலைக்குத் திரும்பவும் முடிகிறது. தாய்ப்பால் சரிவர கொடுக்காத தாய்மார்களுக்கே எடை குறையாமல் கொழுப்பு சேர்ந்து, மேலும் குண்டாகி பருமன்
பிரச்சனையால் அவதிப்பட நேர்கிறது.’’

சுகப்பிரசவத்தில் உள்ள பிரச்னைகள்?
‘‘சுகப்பிரசவத்தின் போது குழந்தை வெளியே வர தேவையான அளவு கர்ப்பப்பை வாய் திறக்காத போது பிறப்புறுப்பில் சிறு கீறல்(Episiotomy) ஏற்படுத்தி குழந்தையை வெளிக் கொண்டு வருவார்கள். பிறகு அந்த இடத்தில் தையல் போட்டு சரி செய்வர். போடப்படும் தையல் சிறியதாக இருந்தாலும், அது தாய்மார்களுக்கு பெரிய அளவில் வலியை ஏற்படுத்தும். தையல் சரியாக இல்லையென்றாலோ, அந்த ரணமானது அலர்ஜியானாலோ அல்லது அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றாலோ சீழ் கோர்த்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதற்கு முறையான ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக்கொண்டு சரி செய்வது அவசியம். இதை அலட்சியப்படுத்தினால் நோய்த்தொற்றானது கர்ப்பப்பை உள்ளேயும் பரவி பிரச்னையை அதிகரிக்கும். பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் மலச்சிக்கலினால் மூலம்(Piles) பிரச்னையும் பெரும் தொல்லையைக் கொடுக்கிறது. இது சுகப்பிரசவமானவர்
களுக்கு உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது.

காய்கறிகள், கீரைகள், பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்வதனாலும், தொடர்ந்து முறையான நடைப்பயிற்சியை மேற்கொள்வதினாலும் இவற்றிலிருந்து மீண்டு வெளியே வரலாம். நோயின் அளவு தீவிரமாக இருந்தாலோ அல்லது இயற்கை உபாதைகளுக்கு சிரமப்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளை எடுத்துக் கொண்டு சரி செய்யலாம்.
சரியாக நஞ்சுக் கொடி(Placenta) அகற்றப்படாமல் மிச்சம் இருந்தாலும் அதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் அபாயமும் சுகப்பிரசவத்தில் ஏற்படுகிறது. அப்படி இருந்தால் அதை ஸ்கேன் பார்த்து சரிசெய்ய வேண்டும்.’’

சிசேரியனில் ஏற்படும் பிரச்னைகள்?
‘‘சிசேரியனில் பேஸ்டிங் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது வெளியே தையல் போடாமல் ஒட்டும் முறையில் சிசேரியன் செய்யப்படுகிறது. உள்ளே போடும் தையல் சரியான அளவில், ரத்தப்போக்கு இல்லாமல், தூய்மையான முறையில் இருந்தால் நோய்த்தொற்று ஏற்படாது.’’

பிரசவத்துக்குப் பின் செய்ய வேண்டியவை…
‘‘சுகப்பிரசவத்தில் 250 மிலி அளவும், சிசேரியனில் 500 மிலி வரையிலும் தாய்மார்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறது. குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தாயின் மூலமே செல்லும். இதனால் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் குறைபாடுகள் ஏற்பட்டு
தாய்மார்கள் பலவீனமடைவார்கள். இதற்கு முறையான ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம். மேலும் குழந்தைகள் வளரும் வரை தேவையான கவனிப்பு, சத்தான உணவுகளை கொடுத்தல், சரியான நேரத்துக்கு தடுப்பூசி போடுதல் போன்ற சில காரணங்களாலும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கின்றன. தாய்மார்களுக்கு பால் கட்டும் பிரச்னையும் ஏற்படுகிறது. இதற்கு சரியான முறையில் பால் கொடுக்க பழக்க வேண்டும். எப்படி வைத்துக் கொண்டு கொடுத்தால் குழந்தைக்கு பால் குடிப்பது வசதியாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சரியாக வாய் வைத்து குடிக்காவிட்டால் அந்த இடத்தில் குழந்தை ஈறுகளை வைத்து கடிக்க ஆரம்பித்து அது ரணத்தை ஏற்படுத்தும். தேவையில்லாத தொற்றுக்குள்ளாகி குழந்தைக்கும் பிரச்னையை ஏற்படுத்தும். குழந்தைக்கு சரியாக பால் செல்வது தட்டுப்பட்டு பால் உற்பத்தியாவதும் குறைந்துவிடும்.’’ பிரசவத்துக்குப் பின் ஏற்படும் தொப்பைப் பிரச்னை மற்றும் தீர்வு… ‘‘சாதாரணமாக சிசேரியனுக்குப் பிறகே தாய்மார்களுக்கு தொப்பை ஏற்படுவதாகவும், சுகப் பிரசவத்தில் தொப்பை ஏற்படுவதில்லை என்றும் தவறான கருத்து உள்ளது. சிசேரியன் மற்றும் சுகப் பிரசவம் இரு முறையிலுமே வயிறு பெரிதாக வாய்ப்பு உள்ளது. காரணம், பெண்களுக்கு வயிற்றுள் இரு திடமான தசைகள் உள்ளன.

இது கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் உடல் உறுப்பு மாற்றத்திற்கு ஏற்ப பெரிதாக தொங்க ஆரம்பித்துவிடும். இதை முறையான உடற்பயிற்சியின் மூலம் சரிசெய்ய முடியும். சுகப் பிரசவம் ஏற்பட்டவர்கள் 2 வாரத்துக்குப் பிறகும் சிசேரியன் முறையில் பிரசவம் ஆனவர்கள் 6 வாரத்திற்குப் பிறகும் இந்த உடற்பயிற்சியை செய்ய ஆரம்பிக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு மருத்துவரை அணுகி இதற்கான உடற்பயிற்சிகளை தெரிந்து கொள்ளலாம். சிசேரியன் அறுவைசிசிச்சைக்குப் பிறகு 6 வார கால ஓய்வு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அதற்குப் பின் உடல் சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்துவிடும். பொதுவாக சிசேரியன் செய்தவர்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதால் தையல் பிரியும் அபாயம் உண்டு என்பதும் தவறான கருத்து. 20 வருடங்களுக்கு முன்பு சிசேரியன் என்பது வெர்ட்டிகல்(Incisional hernia) முறையில் தொப்புளிலிருந்து கீழ்நோக்கி செய்யப்பட்டதால் அதிக எடையுள்ளதை தூக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இப்போது சிசேரியன் குறுக்குவாக்கில் (Horizontal method) செய்வதால் அந்த பயம் இனி தேவை இல்லை.’’

முதுகுவலிகள்…
‘‘சிசேரியன், நார்மல் இரண்டு விதமான பிரசவத்துக்குப் பிறகுமே முதுகுவலிகள் ஏற்படுகின்றன. சிசேரியன் பிரசவத்தின்போது முதுகில் கொடுக்கப்படும் மயக்க மருந்தின்(Spinal Anesthesia) காரணமாகவே முதுகுவலிகள் ஏற்படுகின்றது என்றும் சுகப்பிரசவத்தில் இவை ஏற்படுவதில்லை என்பதும் தவறான எண்ணங்களாகும். பிரசவத்துக்குப் பிறகு உண்டாகும் இரும்பு, கால்சியம் மற்றும் இதர சத்துக் குறைப்பாட்டால்தான் இந்த முதுகுவலிகள் ஏற்படும். உதாரணமாக தாய்ப்பாலில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளது. பிரசவத்தின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதாலும், தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்மார்களுக்கு கால்சியம் பற்றாக்குறை
உண்டாகும். அதுபோல் ரத்தத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படும்பொழுது அவர்களின் முதுகுத்தண்டிலிருந்தே கால்சியம் பெறப்பட்டு குழந்தைகளுக்கு செல்லும். எனவே தாய்மார்களுக்கு கால்சியம் அவசியம். இந்தக் குறைபாட்டினால்தான் முதுகுவலிகள் ஏற்படுகின்றன. இதற்கு முறையான ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வலிகளிலிருந்து விடுதலை பெறலாம்.

அந்த திடீர் மாற்றங்களை எதிர்கொண்டு வெளிவருகிறவர்கள் மிகச்சிலரே. பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போகிறவர்களாகவே இன்றும் இருக்கின்றனர். பிரசவத்துக்குப் பிறகு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களைச் சொல்லி வழிகாட்டுகிறார் மகப்பேறு மருத்துவர் மஞ்சுளா. பிரசவத்துக்குப் பிறகு மனதளவில் பெண் என்னென்ன மாற்றங்களை எதிர்
கொள்கிறாள்? ‘‘குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தை நன்றாக இருக்கிறதா, ஏதேனும் பிரச்னை உள்ளதா, அந்தந்த மாதத்தில் உண்டாகும் முன்னேற்றங்கள் சரியாக உள்ளதா, சரியாக பால் அருந்துவது போன்ற சில தேவையில்லாத பயங்களும் அதிகம் உண்டாகின்றன. அது மட்டுமில்லாமல் குழந்தையை நம்மால் சரியாக வளர்க்க முடியுமா என்பது போன்ற சில அவநம்பிக்கை
களும் ஏற்படுகிறது. பெரும்பாலும் முதல் பிரசவத்தின்போதே இந்த தேவையற்ற சந்தேகங்கள் அதிகம் ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளைக் காண வரும் உறவுகள் கூறும் சில முன்னுக்குப் பின் முரணான அறிவுரைகளாலும் தாய்மார்கள் பெருமளவு குழம்பிவிடுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கிடைக்கும் அனைத்து சேவைகளும், முக்கியத்துவமும் பிரசவத்துக்குப் பிறகு மறைந்துவிடுகிறது. மட்டுமல்லாமல் குழந்தைகளுக்காக விழிப்பது, குழந்தையை சரியாக கவனிக்க, பராமரிக்க வேண்டும் என்கிற சில குழப்பங்களாலும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இவற்றிலிருந்து வெளியே வர குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் அனைத்திலிருந்தும் வெளியே வந்து பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது ஆறு வாரங்களாவது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிரசவத்துக்குப் பின் தாய்மார்களுக்கு அதிகம் தேவைப்படுவது நம்பிக்கை மட்டுமே. அதை அவர்களுக்கு
ஏற்படுத்தினாலே சீக்கிரமே பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.’’ உடல்ரீதியாக என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறாள்?
‘‘உடல் உறுப்புகள் அனைத்திலுமே மாற்றங்கள் ஏற்பட்டாலும் குறிப்பாக இதயத்திலும், ரத்த ஓட்டத்திலும் மாற்றங்கள் பெரிய அளவில் இருக்கும். உதாரணமாக 5 முதல் 5 1/2 லிட்டராக இருந்த ரத்தத்தின் அளவு குழந்தையின் வளர்ச்சிக்கேற்றவாறு 6 முதல் 6 1/2 லிட்டராக அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது அதற்கேற்றவாறு இதயத்தின் வேலையும் அதிகரிக்கும். ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிகழ்வதில்லை. படிப்படியாகவே உயர்கின்றன.

அதேபோல் பிரசவத்துக்குப் பிறகும் இந்த மாற்றங்கள் படிப்படியாகவே குறையும். முதலில் கர்ப்பப்பையானது சுருங்கத் தொடங்கும். அனைத்து உறுப்புகளும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கும். மார்பகங்களில் ஏற்படும் மாற்றமானது கர்ப்பகாலத்தில் மட்டுமல்லாது
பாலூட்டுவது வரை தொடரும்.’’ எடை அதிகரிப்பு பற்றி…‘‘கர்ப்ப காலத்தில் கூடும் எடை, பிரசவத்துக்குப் பின் தானாகவே குறையத் தொடங்கும். குறிப்பாக, தாய்ப்பால் கொடுக்கும்போது 7 முதல் 8 கிலோ வரை எடைக் குறைவு ஏற்படுகிறது. இதன்மூலம் படிப்படியாக குறைந்து அவர்கள் பழைய நிலைக்குத் திரும்பவும் முடிகிறது. தாய்ப்பால் சரிவர கொடுக்காத தாய்மார்களுக்கே எடை குறையாமல் கொழுப்பு சேர்ந்து, மேலும் குண்டாகி பருமன் பிரச்சனையால் அவதிப்பட நேர்கிறது.’’

சுகப்பிரசவத்தில் உள்ள பிரச்னைகள்?
‘‘சுகப்பிரசவத்தின் போது குழந்தை வெளியே வர தேவையான அளவு கர்ப்பப்பை வாய் திறக்காத போது பிறப்புறுப்பில் சிறு கீறல்(Episiotomy) ஏற்படுத்தி குழந்தையை வெளிக் கொண்டு வருவார்கள். பிறகு அந்த இடத்தில் தையல் போட்டு சரி செய்வர். போடப்படும் தையல் சிறியதாக இருந்தாலும், அது தாய்மார்களுக்கு பெரிய அளவில் வலியை ஏற்படுத்தும். தையல் சரியாக இல்லையென்றாலோ, அந்த ரணமானது அலர்ஜியானாலோ அல்லது அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றாலோ சீழ் கோர்த்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதற்கு முறையான ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக்கொண்டு சரி செய்வது அவசியம். இதை அலட்சியப்படுத்தினால் நோய்த்தொற்றானது கர்ப்பப்பை உள்ளேயும் பரவி பிரச்னையை அதிகரிக்கும்.

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் மலச்சிக்கலினால் மூலம்(Piles) பிரச்னையும் பெரும் தொல்லையைக் கொடுக்கிறது. இது சுகப்பிரசவமானவர்களுக்கு உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. காய்கறிகள், கீரைகள், பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்வதனாலும், தொடர்ந்து முறையான நடைப்பயிற்சியை மேற்கொள்வதினாலும் இவற்றிலிருந்து மீண்டு வெளியே வரலாம். நோயின் அளவு தீவிரமாக இருந்தாலோ அல்லது இயற்கை உபாதைகளுக்கு சிரமப்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனையோடு மருந்துகளை எடுத்துக் கொண்டு சரி செய்யலாம். சரியாக நஞ்சுக் கொடி(Placenta) அகற்றப்படாமல் மிச்சம் இருந்தாலும் அதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் அபாயமும் சுகப்பிரசவத்தில் ஏற்படுகிறது. அப்படி இருந்தால் அதை ஸ்கேன் பார்த்து சரிசெய்ய வேண்டும்.’’

சிசேரியனில் ஏற்படும் பிரச்னைகள்? ‘‘சிசேரியனில் பேஸ்டிங் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது வெளியே தையல் போடாமல் ஒட்டும் முறையில் சிசேரியன் செய்யப்படுகிறது. உள்ளே போடும் தையல் சரியான அளவில், ரத்தப்போக்கு இல்லாமல், தூய்மையான முறையில் இருந்தால் நோய்த்தொற்று ஏற்படாது.’’ பிரசவத்துக்குப் பின் செய்யவேண்டியவை…
‘‘சுகப்பிரசவத்தில் 250 மிலி அளவும், சிசேரியனில் 500 மிலி வரையிலும் தாய்மார்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறது. குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தாயின் மூலமே செல்லும். இதனால் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் குறைபாடுகள் ஏற்பட்டு
தாய்மார்கள் பலவீனமடைவார்கள். இதற்கு முறையான ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம். மேலும் குழந்தைகள் வளரும் வரை தேவையான கவனிப்பு, சத்தான உணவுகளை கொடுத்தல், சரியான நேரத்துக்கு தடுப்பூசி போடுதல் போன்ற சில காரணங்களாலும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கின்றன.

தாய்மார்களுக்கு பால் கட்டும் பிரச்னையும் ஏற்படுகிறது. இதற்கு சரியான முறையில் பால் கொடுக்க பழக்க வேண்டும். எப்படி வைத்துக் கொண்டு கொடுத்தால் குழந்தைக்கு பால் குடிப்பது வசதியாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியாக வாய் வைத்து குடிக்காவிட்டால் அந்த இடத்தில் குழந்தை ஈறுகளை வைத்து கடிக்க ஆரம்பித்து அது ரணத்தை ஏற்படுத்தும். தேவையில்லாத தொற்றுக்குள்ளாகி குழந்தைக்கும் பிரச்னையை ஏற்படுத்தும். குழந்தைக்கு சரியாக பால் செல்வது தட்டுப்பட்டு பால் உற்பத்தியாவதும் குறைந்துவிடும்.’’ பிரசவத்துக்குப் பின் ஏற்படும் தொப்பைப் பிரச்னை மற்றும் தீர்வு… ‘‘சாதாரணமாக சிசேரியனுக்குப் பிறகே தாய்மார்களுக்கு தொப்பை ஏற்படுவதாகவும், சுகப் பிரசவத்தில் தொப்பை ஏற்படுவதில்லை என்றும் தவறான கருத்து உள்ளது. சிசேரியன் மற்றும் சுகப் பிரசவம் இரு முறையிலுமே வயிறு பெரிதாக வாய்ப்பு உள்ளது. காரணம், பெண்களுக்கு வயிற்றுள் இரு திடமான தசைகள் உள்ளன.
இது கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் உடல் உறுப்பு மாற்றத்திற்கு ஏற்ப பெரிதாக தொங்க ஆரம்பித்துவிடும். இதை முறையான உடற்பயிற்சியின் மூலம் சரிசெய்ய முடியும். சுகப் பிரசவம் ஏற்பட்டவர்கள் 2 வாரத்துக்குப் பிறகும் சிசேரியன் முறையில் பிரசவம் ஆனவர்கள் 6 வாரத்திற்குப் பிறகும் இந்த உடற்பயிற்சியை செய்ய ஆரம்பிக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு மருத்துவரை அணுகி இதற்கான உடற்பயிற்சிகளை தெரிந்து கொள்ளலாம்.

சிசேரியன் அறுவைசிசிச்சைக்குப் பிறகு 6 வார கால ஓய்வு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அதற்குப் பின் உடல் சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்துவிடும். பொதுவாக சிசேரியன் செய்தவர்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதால் தையல் பிரியும் அபாயம் உண்டு என்பதும் தவறான கருத்து. 20 வருடங்களுக்கு முன்பு சிசேரியன் என்பது வெர்ட்டிகல்(Incisional hernia) முறையில் தொப்புளிலிருந்து கீழ்நோக்கி செய்யப்பட்டதால் அதிக எடையுள்ளதை தூக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இப்போது சிசேரியன் குறுக்குவாக்கில் (Horizontal method) செய்வதால் அந்த பயம் இனி தேவை இல்லை.’’

முதுகுவலிகள்…
‘‘சிசேரியன், நார்மல் இரண்டு விதமான பிரசவத்துக்குப் பிறகுமே முதுகுவலிகள் ஏற்படுகின்றன. சிசேரியன் பிரசவத்தின்போது முதுகில் கொடுக்கப்படும் மயக்க மருந்தின்(Spinal Anesthesia) காரணமாகவே முதுகுவலிகள் ஏற்படுகின்றது என்றும் சுகப்பிரசவத்தில் இவை ஏற்படுவதில்லை என்பதும் தவறான எண்ணங்களாகும். பிரசவத்துக்குப் பிறகு உண்டாகும் இரும்பு, கால்சியம் மற்றும் இதர சத்துக் குறைப்பாட்டால்தான் இந்த முதுகுவலிகள் ஏற்படும். உதாரணமாக தாய்ப்பாலில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளது. பிரசவத்தின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதாலும், தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்மார்களுக்கு கால்சியம் பற்றாக்குறை உண்டாகும். அதுபோல் ரத்தத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படும்பொழுது அவர்களின் முதுகுத்தண்டிலிருந்தே கால்சியம் பெறப்பட்டு குழந்தைகளுக்கு செல்லும். எனவே தாய்மார்களுக்கு கால்சியம் அவசியம். இந்தக் குறைபாட்டினால்தான் முதுகுவலிகள் ஏற்படுகின்றன. இதற்கு முறையான ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வலிகளிலிருந்து விடுதலை பெறலாம்.

119
-
Rates : 0
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க SHARE செய்யவும்
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]