உங்களுக்காக சில சமையல் இரகசியங்கள். | www.VijayTamil.Net

உங்களுக்காக சில சமையல் இரகசியங்கள்.

Loading...

• சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
•தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.

• கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
• பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும். தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
• தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும். குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
• நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
• வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சுநீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
•காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.
மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
• கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால்தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
• கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.
•புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும்.
ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
• வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம், முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது. அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர் வளமடைவார்.
. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும்கூடாது. அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.
•வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின்
இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி,அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில்கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால்ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
நவதானிய அடை சமையல்:
பச்சரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – ஒரு பிடி
பயத்தம்பருப்பு – ஒரு பிடி
கொண்டைக்கடலை, உளுத்தம்பருப்பு – இரண்டும் சேர்த்து ஒரு பிடி
மசூர்தால், காராமணி, நிலக்கடலை – மூன்றும் சேர்த்து ஒரு பிடி
மிளகாய் வற்றல் – 10
பெரிய வெங்காயம் – 2
கறிவேப்பிலை – 2 கொத்து
பெருங்காயப்பொடி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
⭕️ வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயார்படுத்தி வைக்கவும்.
⭕️ அரிசி, பருப்புகளை ஒன்றாக சேர்த்து, மிளகாய் வற்றலுடன் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
⭕️ ஊற வைத்த அரிசி, பருப்பு கலவையை மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். உப்பு, பெருங்காயப்பொடி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
⭕️ கனமான அடைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை சற்று கனமாக ஊற்றி, நடுவில் ஒரு சிறிய ஓட்டை போட்டு நல்லெண்ணெய் விடவும்.
⭕️ நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.
நவதானிய அடை ரெடி. சாம்பார், வெண்ணெய், வெல்லத்துடன் பரிமாறவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க SHARE செய்யவும்
Loading...
Copyrights Infringment Notification http://vijaytamil.net/ does not upload any videos/media files to any online video hosting service provider or to any video/media file sharing site. We merely link to content that is freely available on the public internet domain. These link can also be easily found through a internet search. The owner or the webmaster of this site cannot take any responsibility/liability for the content appearing on this site as we have no connection whatsoever with the original uploaders. If you are the copyright owner of a content, you should first notify the video hosting service provider (youtube, Dailymotion, yahoo video and so on) and ask them to remove the content. Additionally you can also request us to remove the content using the following information. Please not that it may take up to 1 week for us to verify the claims and remove any content. It would be easier on your part to directly contact the video hosting service as they have the mean to easily verify your claim. Filling out the following form will provide us with information to verify your claims and remove any copyrighted content. We respect all copyrights owners and remove their copyrighted works. இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் அனைத்துப் பதிவுகளுக்கும் விஜய்தமிழ்.NeT எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..உங்களின் பதிவுகள் தான் என்று ஆதாரத்துடன் கூறினால் நீக்க படும் [contact_form]