அழகுக் குறிப்புகள் | www.VijayTamil.Net

All videos in category அழகுக் குறிப்புகள் (1813 videos)

 • அழகைக் கெடுக்கும் விஷயம் என்று வரும் போது, அதில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பேக் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் கூட வரும். இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் சென்று பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, தழும்புகளாக மாறுகின்றன....

 • முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். பல அற்புத மூலிகைகள் கூந்தல் வளர்ச்சிக்காக நமது நாட்டில் காலங்காலமாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி சில பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக. * மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக...

 • அழகை மேம்படுத்த அன்னாசி பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் விட்டமின் சி, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உங்களது தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்க உதவுகிறது. இதன் சாறு சருமம் பொலிவிற்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பொலிவான சருமம்: அன்னாசி பழத்தில் உள்ள விட்டமின் சி சருமத்தை பொலிவாக்குகிறது. செய்முறை: அன்னாசி பழத்தை துண்டுகளாக நறுக்கி ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து...

 • முகத்தின் அழகினை கெடுக்கும் வகையில் உள்ள கரும்புள்ளிகளை போக்க வெறும் இரண்டு நாட்களே போதும். கரும்புள்ளியை போக்கும் வழிகள்? வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் உள்ள கருமைகள் மறைந்துவிடும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பளபளக்கும். பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்...

 • கரும்புள்ளி, கருமையும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதா? கவலைப்படாதீர்கள். உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது தக்காளி பேஷியல். கரும்புள்ளி, கருமையும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதா? கவலைப்படாதீர்கள். உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது தக்காளி பேஷியல். உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1 டீஸ்பூன், தக்காளி விழுது – அரை டீஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து...

 • பெண்கள் விரல் நகங்களை நெயில் பாலீஷ் போட்டு அழகுபடுத்த ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காண்பிப்பதில்லை. சிலருக்கு நகங்கள் பலகீனமாக இருக்கும். அதன் வளர்ச்சி சீராக இருக்காது. எளிதில் உடைந்துபோய் விடும். பெண்கள் விரல் நகங்களை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விரல்...

 • முகப்பருக்களை உருவாக்க காரணமான உணவுகள்!

 • பெண்கள் வீட்டை பராமரிக்க சில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது. வீட்டையும் அழகாக வைத்துக்கொள்ளலாம், வீட்டு பொருட்களையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். இப்போது வீட்டை எப்படி பரமரிப்பது என்று பார்க்கலாம். * சாப்பாட்டு மேசையில் தேவையற்ற பொருட்கள் வைக்கப்படுவதை தவிர்த்து விடலாம். டேபிளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. பல வீடுகளில் நாற்காலிகள் மீது ஈர டவல்களை உலர்த்த வைத்துப்பார்கள். அதையும் தவிர்த்து விடுவது அவசியம். ஊறுகாய், சாஸ், நெய், உப்பு, பொடிவகைகள் போன்றவற்றை அழகாக ஒரு...

 • பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக் கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக் கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக் கொள்ள...

 • ந‌மது உதடுகள் வறட்சி ஏற்படும் போது அல்ல‍து காய்ந்து விடும்போது, நாம் நமது நாவினால், உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். ஆம் நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு...

 • வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர் வேத மருத்துவத்தை மேற்கொண்டால், சரிசெய்ய முடியாத நோயையும் சரிசெய்யலாம் என்று சொல்வதற்கு காரணம் வேப்பிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இப்போது அத்தகைய வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!! * வேப்பிலையை கொதிக்கும்...

 • முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பெண்கள் த்ரெட்டிங் செய்வார்கள். சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க வேக்சிங் இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் த்ரெட்டிங்கை தான் மேற்கொள்கிறார்கள். இதற்கு காரணம் வேக்சிங்கை விட த்ரெட்டிங் செய்வதால் வலி சற்று குறைவாக இருப்பது தான். த்ரெட்டிங் புருவங்களில் மட்டுமின்றி, உதட்டிற்கு மேல் மற்றும் நெற்றியிலும் சிலர் செய்வார்கள். த்ரெட்டிங் செய்த பின் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்போது தான் அவ்விடத்தில் பிம்பிள், புண் வருவதை தடுக்கலாம்....

 • அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம். முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த...

 • அழகு என்ற வார்த்தை பெண்களுக்கு பொருத்தமானது. நடை அழகு, ஆடை அழகு, கண் அழகு, கூந்தல் அழகு என்று அடுக்கி கொண்டே போகலாம். பேஷன் துறையில் பல்வேறு பெண்கள் கலந்துகொண்டு அழகிகள் பட்டியலில் இடம்பெற்றாலும், தமிழ் பெண்களுக்கு என்றே ஒரு தனி அழகு உண்டு. கலாசாரத்தை பின்பற்றுவதில் குறிக்கோளாக இருக்கும் தமிழ் பெண்கள், தங்கள் அழகினை பேணிக்காப்பதில் அதிகமாக இயற்கை முறையினையே பின்பற்றுவார்கள். முகத்திற்கு வேதிப்பொருட்கள் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, பயத்தம் மாவு, கடலை மாவு,...

 • ஒரே நாளில் முகப்பருவை நீக்கும் வெந்தயம்.

 • எண்ணெய்பசை சருமத்திற்கு எளிய வீட்டு வைத்தியம்

 • முகத்தை பளபளப்பாக ஆக்க அழகு குறிப்பு

 • மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள். மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியுடன் முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து, நன்றாக கலக்குங்கள். பின் முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு 20 நிமிடம் நன்றாக காய விடுங்கள். பிறகென்ன சுருக்கங்கள் முகத்திற்கு பை பை சொல்லும்....

 • லைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும். * கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும்....

 • இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி...

 • மன அழுத்தம் மண்டையை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நமது எண்ணெய் சுரப்பிகள் சீபம் என்கிற எண்ணெயை அதிகமாகச் சுரக்கும். அதே போல மன அழுத்தமும் கோபமும் அதிகமாக இருக்கும் போது ரத்த நாளங்கள் சுருங்கி விடும். அப்போது முடியின் வேர்களுக்குப் போகிற ரத்த ஓட்டம் தடைப்படும். வெறும் 5, 10...

 • சில பெண்களுக்கு கருகருவென முடிகள் அழகாக, சுருளாக இருக்கும். பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் இவர்கள், இத்தகைய முடிகளால் சிரமங்களை அடைவதுண்டு. இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகள் சுருள் முடிகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உதவுவதுடன், அதனை ஆரோக்கியமாகவும் பாதுகாக்க உதவும். அகன்ற பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துவதன் மூலம்…நம்முடைய முடிக்கு எந்த ஒரு பங்கமுமின்றி நம்மால் சிக்கலுக்கான தீர்வினை பெற முடியும். சீப்பினை கொண்டு முதலில் சீவி, அதன் பின் நாம் ஹேர் ஸ்ப்ரேக்களை அடிப்பதன்...

 • தலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள் இதோ! வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து, அந்த நீரில் தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்....

 • மனிதர்களில் முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சியின்னை என்பன அழகை குறைக்கும் செயற்பாடுகள் ஆகும். இதனால் செயற்கை முறையில் முடி நடுதல் போன்ற மாற்று சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன. எனினும் எதிர்காலத்தில் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை தரக்கூடிய கண்டுபிடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது தோலில் காணப்படும் நோயெதிர்ப்பு சக்தி கொண்ட கலங்கள் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக T வகை கலங்களே முடி வளர்ச்சியில் பிரதான பங்கு வகிக்கின்றன. இதனை...

 • தலையில் பொடுகு இருந்தால் அரிப்பு, முடி உதிர்தல், தலையில் புண் ஏற்படுதல், முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் அதிகமாகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே இயற்கையான வழியில் தலையில் உள்ள பொடுகை முற்றிலும் ஒழிக்க, அற்புதமான எண்ணெய் இதோ! தேவையான பொருட்கள் வேப்பிலை – 1 கைப்பிடி துளசி – 1/2 கைப்பிடி புதினா – 1/2 கைப்பிடி தேங்காய் எண்ணெய் – 150 மிலி பச்சை கற்பூரம் ஓம விதைகள் தயாரிக்கும் முறை வேப்பிலை,...

 • முகம் எப்போதும் பொலிவுடன் தோன்ற வேண்டும். முகம் சோர்வாக காணப்படுபவர்களிடம் சுறுசுறுப்பு எட்டிப்பார்க்காது. கடுமையான வேலை செய்து களைத்து போய் இருப்பவர்களிடமும் புத்துணர்ச்சி கரைந்து போயிருக்கும். முக பொலிவுக்கும், சோர்வுக்கும் தொடர்பு இருக்கிறது. சோர்வாக காட்சியளிப்பவர்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதன் மூலம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பொதுவாக தண்ணீரில் முகம் கழுவினாலே முகத்தில் தென்படும் சோர்வு விலகத் தொடங்கும். பயணங்கள் மேற்கொண்ட களைப்புடன் வீடு திரும்புபவர்களும் பயணத்திற்கு தயாராகிறவர்களும் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில்...

 • சருமத்தில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். சரி, இப்போது றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம். * சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்...

 • மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போல் இல்லாமல் இப்போது பெண்கள் வெளியே வெய்யிலில் அலைய வேண்டியதாகிறது. வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும். அதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே...