உடற்பயிற்சி | www.VijayTamil.Net

All videos in category உடற்பயிற்சி (407 videos)

 • செய்முறை: நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையில், ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைக்கவும். கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்ட வேண்டும். உடம்பை மெதுவாக கீழே இறக்கி நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும். தொடையின் மேல் பகுதி கிடைமட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலையில் முதுகெலும்பு நேராக, 90 டிகிரியில் இருக்க வேண்டும். முன் பக்க உடம்பை வளைக்க கூடாது. கால அளவு: 20...

 • நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள உத்திகளை பின்பற்றினால் உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும். ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை. உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு...

 • உடல்பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்துவிடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத் துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது. விரிப்பில் சப்பளாங்கால்...

 • சந்திரநாடி பிராணாயாமம் : செய்முறை: வஜ்ராசன முறையில் அமர வேண்டும். வலது கையை நாசிக்கான முத்ராவில் வைக்க வேண்டும். இப்போது, வலது நாசியில் வலது கையின் பெருவிரலை வைத்து மூட வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து விட வேண்டும். இதேபோல் 10 – 15 முறை செய்யலாம். இந்தப் பிராணாயாமப் பயிற்சியை மூன்று வேளையும் செய்யலாம். பலன்கள்: சந்திரநாடி பிராணாயாமம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். மனஅழுத்தம், மனச்சோர்வு குறையும். தூக்கமின்மையைச் சரிசெய்து, எளிதில் செரிமானசக்தியைச்...

 • செய்முறை : விரிப்பில் கால்களை முன்னே நீட்டியபடி உட்காரவும். இடது கையால் வலது காலைப் பிடித்து, இடது காலின் தொடைக்கு மேலே கொண்டு வந்து, பின் தொடைக்கு அருகே தரையில் வைக்கவும். பின் இடது காலை மடக்கி, வலது தொடைக்கு கீழ் வைக்கவும். இரு குதிகால்களும் பிட்டப் பகுதியை அணைத்தவாறு அல்லது வெகு அருகில் இருக்க வேண்டும். இரு கால்களின் மூட்டுகளும் ஒன்றன்மேல் ஒன்றாக நன்றாக இணைந்திருக்க வேண்டும் மூச்சை இழுத்துக் கொண்டே வலது கையை மேலே...

 • பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)என்ற எடை தூக்கும் கருவி தேவை. பார்பெல் பிடியை பின்தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும். கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்தநிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள்இழுத்து கீழே உட்காருவது போன்ற நிலைக்குக் கால்முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு...

 • தேர்ந்த குரு பயிற்சிக்கு ஏற்ற இடம் முறையான உணவு தகுந்த காலம் நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும் உடல் தூய்மை தொடர்ச்சி பயிற்சி குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், வகை வகையான பிராணாயாமங்களில் திறமை பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்வது. ஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால் நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள் நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை, வீட்டின் மொட்டைமாடி… என நல்ல காற்றும்...

 • மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை: இது சாதாரணப் பிராணாயாமம். ‘தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும்...

 • ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம். நாங்கள் பயிற்சி செய்யும் யோகா மரபிலிருந்து முக்கியமான இரண்டு பிராணாயாமங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நீங்கள்...

 • பெண்கள் அலவலகத்திலும், இல்லத்திலும் எப்போதும் பணிகளை மேற்கொண்டுதான் இருப்பர். இதில் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய எங்கே நேரம் ஒதுக்குவது என்பர். ஆனால் பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும். காலை முதல் இரவு வரை அனைத்து பணிகளை மேற்கொள்வது எவ்வளவு அவசியமோ பெண்கள் உற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். உடற்பயிற்சியை பெண்கள் மேற்கொள்வதன் மூலம் உடலும், மனமும் என்றும் இளமையுடன்...

 • ‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம். இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில்,...

 • பலன்கள் : இது தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்ப்படும். செய்முறை : இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும். காலை, மாலை என 10 முதல் 15 நிமிடம் தினமும் செய்ய வேண்டும். இந்த முத்திரையை தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு செய்யலாம். 1 மாதம் தொடர்ந்து இந்த...

 • சக்தி முத்திரை பெண்களுக்கும், ஆண்களுக்கும் தேவையான அனைத்து சக்திகளையும் தருவதாகவும், குறிப்பாக அடி வயிற்றுப் பகுதிக்கு சக்தியைத் தந்து உள் உறுப்புகளுக்கு பலம் தந்து, நல்ல உறக்கம், கருப்பைக் கோளாறு, கர்ப்பம் தரிப்பதில் தாமதம், மாதவிடாய் கோளாறு போன்றவற்றிற்கு நிவாரணம் தரும். ஆண்களுக்கு, குடல், விரைப்பைகளில் கழிவுகள் தேங்காமல் பாதுகாக்கும். செய்முறை : இந்த முத்திரையை தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து...

 • சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாக்கிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

 • செய்முறை : விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும். இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல்...

 • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் இறங்கும் போது, பலரும் அடிவயிறு, தொடை, பிட்டம் மற்றும் கைகளில் உள்ள கொழுப்பைத் தான் குறைக்க முயல்வார்கள். கொழுப்புக்கள் அடிவயிற்றிற்கு அடுத்தப்படியாக இடுப்புப் பகுதியில் தான் அதிகம் தேங்கும். கொழுப்பைக் குறைக்க முயலும் போது, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். இங்கு இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க உதவும் சில எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. புஷ்-அப் : புஷ்-அப் பலரும்...

 • வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்யலாம். உடல் சூடு குறையும். நா வறட்சி போக்கி தாகம் தணியும். உடலில் நீரின் அளவு சரியான நிலையில் இருக்க உதவும். இதனால் உடலில் ஏற்ப்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடலில் நீரின் அளவு மறுபடுவதே பல நோய்கள் வருவதற்கு ஆரம்பமாக இருக்கிறது. இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.. இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும்,...

 • இது நாயின் முகம் கீழ் நோக்கியவாறு உள்ளது போன்ற அமைப்பினை கொண்டதால் இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது. செய்முறை : குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும். மூச்சை வெளிவிட்டு உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும். இந்நிலையில் ஆழமாகச் சுமார்...

 • நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால், நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, சக்தியோ அல்லது வசதியோ இருப்பதில்லை. இங்கு வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஒரு நிலையான நாற்காலி, பயிற்சிக்கான பாண்ட் கயிறு (Band) மற்றும் சுவர் ஆகியவற்றைக் கொண்டு மட்டும் எல்லா வயதைச் சேர்ந்த நபர்களும்...

 • பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும். ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும்....

 • செய்முறை : இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும். கண்கள் திறந்தபடி, கைகள் உடலை ஒட்டிய நிலையில் இயல்பாக இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக மேலே கொண்டுசெல்லவும். தலைக்கு மேல் கைகள் நேராக இருக்க வேண்டும். ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை வெளியே விட்டபடி, முட்டியை மடித்து, மேல் உடலை முன்புறமாகக் கொண்டுசெல்லவும். ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல்புறமாக நகர்த்தி முதுகெலும்பை, பின்னால் நன்றாக...

 • ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும். இடுப்பு, வயிற்றை ஃபிட்டாக்கும் 20 நிமிட பயிற்சிகளை கீழே பார்க்கலாம். ரிவர்ஸ் கிரன்ச் (swiss ball Reverse crunch) : தரையில் அமர்ந்து கால்களை சற்று அகட்டி வைக்க வேண்டும். கால்களுக்கு இடையே சுவிஸ் பந்தை வைத்து, பாதங்களால்...

 • இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். புஜங்காசனம் இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும். முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில்...

 • செய்முறை : இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்கவும். கைகள் உடலை ஒட்டி இயல்பாக இருக்கட்டும். இதே நிலையில், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முதலில் இடது கையை முன்புறமாக மேலே தூக்கவும். ஓரிரு விநாடிகளுக்குப் பின், மூச்சை வெளியே விட்டபடி, இடது காலை முன்பக்கமாக மேலே தூக்கவும். அதே நேரம், இடது கையை முன்புறமாகக் கீழே இறக்கி, இடது கால் பெருவிரலை, ஆட்காட்டி மற்றும் நடுவிரலால் நன்கு பிடிக்கவும். வலது கையை இடுப்பில் வைத்துக்கொள்ளவும். பார்வை நேராக இருக்கட்டும்....

 • நமது உடம்பில் கொழுப்புகள் அனைத்தும் அதிகமாக சேரும் இடம் தான் பெல்லி. எனவே பெல்லியில் இருக்கும் கொழுப்புகளைக் குறைத்து, கவர்ச்சியான மற்றும் அழகான பெல்லியை பெறுவதற்கு சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கவர்ச்சியான பெல்லிக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் முதலில் நம்முடைய இரண்டு கால்களை ஊன்றி உட்கார்ந்துக் கொண்டு, இரண்டு கைகளையும் தலையின் மீது வைத்து, தரையில் படுத்து எழுந்து இருக்க வேண்டும். இதனால் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்புகள் குறையும், எனவே இதே...

 • பெண்கள் அனைவரையும் அழகாக காட்டுவது அவர்களின் ஸ்லிம்மான இடை அழகு தான். எனவே பெண்கள் தங்களின் இடையை எப்போதும் ஸ்லிம்மாக மற்றும் அழகாக பராமரிப்பதற்கு, தினமும் இந்த பயிற்சியை மட்டும் மறக்காமல் செய்து வந்தாலே போதும். ஸ்லிம்மான இடை அழகை பெற என்ன செய்ய வேண்டும்? முதலில் விரிப்பில் குப்புற படுத்து, காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றி, கைகளை முட்டி வரை மடக்கி தரையில் வைக்க வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது, நம்முடைய உடல்...

 • நமது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனமாக உள்ளது. செய்முறை : முதலில் தரையில் அமர வேண்டும். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமர வேண்டும். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யவும். இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம்...

 • கொழுப்பை எரிக்க உங்களுக்கு தோதுபடுகிற மாதிரி 10 நிமிட உடற்பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்ப தொடர்ந்து கீழே படியுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள உத்திகளை பின்பற்றினால் உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும். ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து...