மருத்துவம் | www.VijayTamil.Net

All videos in category மருத்துவம் (7074 videos)

 • தூதுயிலை கிடைக்கவே நாம தூது போகணும்… அப்படியரு மகத்துவம் அதுல இருக்கு. கத்தரிச் செடி வகையைச் சேர்ந்த கொடிதான் தூதுயிலை. இலையைப் பாத்தாலே… பச்சைப்பசேல்னு கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கும்.” ”அடியே அம்மணி… தூது எல்லாம் போவேனாம். காதத் தூரத்துல இருக்குற வயக்காட்டுலேயே தூதுயிலை வேலியில படர்ந்துகெடக்கு. இது தெரியாதா ஒனக்கு..?” ”அப்புடியா சங்கதி? தூதுயிலைக்காக நான் அலையாத எடம் இல்ல. இன்னிக்கு மாத்திரை மருந்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம், மூலிகைக்குத்தான் கட்டுப்படுது. தூளிக்குள்ளத் தூங்குற குழந்தைகூட தூதுயிலையைப் பத்தி...

 • புளிய இலையின் பயன்கள் சித்த மருத்துவத்தில், புளிய இலை சிறந்த வலி நிவாரணியாக கூறப்படுகிறது. வலி நிவாரணி : உடலில் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைய, புளிய இலைகளை சூட்டில் வதக்கி ஒரு துணியில் வைத்து, அவ்விடங்களில் ஒத்தடம் கொடுத்து, அதன்பின் வீக்கங்களின் மேல் வதக்கிய புளிய இலைகளை கட்டிவரலாம். கால்களில் , கைகளில் தண்ணீர் படும் இடங்களில் உள்ள காயங்கள் எளிதில் ஆறாது, அந்தக் காயங்களை ஆற்ற, புளிய இலைகள், வேப்பிலைகள் இரண்டையும்...

 • அருகம்புல்லின் அருமை! * அருகம்புல் வேரை, நிழலில் உலர்த்தி, இடித்து, கஷாயம் செய்து கொள்ளவும். இத்துடன், பால், சர்க்கரை சேர்த்து, காபி போல சாப்பிட, மார்பு வலி நீங்கும், உடல் இளைக்க உதவும், உறக்கம் தரும், பல் மற்றும் ஈறு நோய்கள் நீங்கும், வயிற்று புண், கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிலக்கு தொல்லைகள் நீங்கும். மசாஜ் செய்து விட்டதைப் போல, உடம்பு உற்சாகமாக இருக்கும். * அருகம்புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து, அரைத்து, உச்சந்தலையில் பற்றுப் போட்டால்,...

 • * கடுமையான இருமல் இருந்தால், மூன்று கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். * பல் வலி குறைய, துளசி இலை இரண்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை, வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும் வலி குறையும். * சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

 • நாட்டு மருந்துக்கடை கு.சிவராமன் – சித்த மருத்துவர்தமிழன் உணவில் கூடுதல் அக்கரையுடன் சேர்க்கப்படும் வெந்தயம், கசப்புதான். ஆனால், அந்த கசப்பு கொண்டுள்ள மருத்துவ செய்திகள் அத்தனையும் இனிப்பு. சர்க்கரை நோயில் இருந்து, தலைமுடி உதிர்வு வரை அழகும் ஆரோக்கியமும் பரிமாறும் இந்த அதிசய விதைகள், சின்னஞ்சிறு நல மாத்திரைகள். கிரேக்கர்களால் இந்தியாவுக்குள் நுழைந்த வெந்தயம், சித்த, ஆயுர்வேத மருந்து என்பதுடன், தமிழர் உணவில் பெரும் ஆளுமையைப் பெற்ற மணமூட்டியும்கூட. நாட்பட்ட, தொற்றாத வாழ்நாள் நோய்க் கூட்டங்களான சர்க்கரை...

 • Mooligai Maruthuvam,mooligai maruthuvam tamil kerala,mooligai maruthuvam,mooligai maruthuvam for weight loss,mooligai maruthuvam tamil language,mooligai maruthuvam tips,mooligai maruthuvam tamil pdf free download,mooligai maruthuvam in tamil,mooligai maruthuvam vendhar tv,mooligai maruthuvam in sun tv,mooligai maruthuvam makkal tv

 • Hello Doctor tamil,,hello doctor tamil,,hello doctor tamil tv show,download,hello doctor tamil magazine

 • உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருதாணி! மருதாணி தெரியும். அதற்கு மருதோன்றி, அழவணம் என்ற பெயர்களும் இருக்கின்றன. கண் எரிச்சல், உடல்சூடு உள்ளவர்கள், மருதாணியை அரைத்து மாதம் ஒருமுறை கை – கால்களில் பூசி வந்தால், மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டியிருக்காது. மருதாணி இலையை மையாக அரைத்து சொத்தை பிடித்த நகங்களின் மேல் தொடர்ந்து சில நாட்கள் கட்டி வந்தால் பலன் கிடைக்கும். வெள்ளைப்படுதல், பெரும்பாடு (மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு), அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், 20...

 • நொறுக்குத் தீனி பிரியர்கள் பலருக்கு, இப்பழக்கம் நம் ஆரோக்கியத்தை நொறுக்கி விடுமோ என்ற பயம் இருக்கும். அப்படி பயம் ஏதும் இல்லாமல் சாப்பிடக்கூடிய ‘ஸ்நாக்ஸ்’, ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்புச் சோளம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண் பார்வை, சருமத்துக்கு நலம் பயக்கக்கூடியவை. இவை தவிர மேலும் பல ஆரோக்கிய அனுகூலங்களை ஸ்வீட் கார்ன் வழங்குகிறது. அவை பற்றிப் பார்ப்போம்… ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி1 ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, கார்ன் ஆயிலில்...

 • * பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும். * எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை...

 • விளைச்சல் : பசுமை மாறாத கற்பூர மரம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைச்சேர்ந்த. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இது கற்பூரம் தயாரிக்க தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது. கற்பூரமரத்தில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் உள்ளன. கேம்ஃபர், செப்ரோல், யூஜினால் மற்றும் டெர்பினியரல், இவற்றுடன் லிக்னான்களும் காணப்படுகின்றன. மருத்துவ குணங்கள் : இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. வாயுத் தொல்லை மற்றும் வாயுவு பிரச்சனையால் வயிறு வீங்குதல் போன்றவை ஏற்படாமல்...

 • பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாமே, தாது உப்புக்கள், வைட்டமின்கள் முதலான உயிர்ச்சத்துக்களை இழந்து விடுகின்றன. ‘உணவு’ என்பதன் இயல்பையே இழந்து விடுகின்றன. மேல்பூச்சாகச் சேர்க்கப்படும் நிரமிகளும், மண மூட்டிகளும் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. சுத்திகரிக்கப்படும் போது (?!) எண்ணெய் 400 டிகிரிக்கு மேலே சூடாக்கப்படுகிறது. ரசாயனக் கரைப்பானைப் பயன்படுத்தி எண்ணெய் வடித்தெடுத்தபின், அதன் உண்மையான நிறம், சுவை ஆகியவற்றை இழந்து, புதியதாக உருவாக்கப்பட்ட ட்ரான்ஸ்ப்ட்டி ஆஸிட் ஆக வெளிவருகிறது. சமையலுக்கு உபயோகிக்கும் போது மேலும் புதிய...

 • புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவை புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை, இவை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் திறன் படைத்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வை அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் லூகாஸ் மற்றும் சைனீஸ் அகாடமியை சேர்ந்த டேவிஸ், சான்வென் ஹூயாஸ் ஆகியோர் நடத்தினர். வெள்ளரி வகையைச் சேர்ந்த இந்தக் காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் இலைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக தங்கள்...

 • நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர அட்டவணைப்படி எடுத்து கொள்ள கூடாது. ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். சிலர் வெந்நீர் அருந்துவார்கள், ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பதுதான் நல்லது. ஏனெனில்...

 • புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புடலங்காயில் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் நார்சத்தானது உடலானது ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க தூண்டுகிறது. மேலும் இக்காய் மலச்சிக்கலிருந்து நிவாரணம் அளிக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்காயை கசாயம் வைத்து இரவில் குடிக்க காய்ச்சல் சரியாகும். இம்முறையானது...

 • மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள். இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும் என்று மருத்துவ...

 • வால்நட்ஸை மருத்துவ குணம் நிறைந்த தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அது உடலில் உள்ள சில பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும். வால்நட்ஸில் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், புரோடீன்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இங்கு தேனில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சிறிது சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம். இரத்த சோகை உள்ளவர்கள் 1/2 கிலோ தேனில், 1/2 கிலோ வால்நட்ஸ் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, ஒரு ஸ்பூன்...

 • பூண்டு சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய பூண்டை நாம் பயன்படுத்த வேண்டும் அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது. சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும். தேன் மழைக்காலம்...

 • மாதுளம் பழம் : இங்கே மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்று மாதுளம்பழம். இரான் மற்றும் இந்தியாவில் தான் இந்தப்பழம் பயிரிடப்படுகிறது. மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு… `சைனீஸ் ஆப்பிள்.’ பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும்கொண்டது. பாஸ்பரஸ் : மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70மி.கி....

 • ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம். சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம், அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே வயதுக்கும் எடைக்கும் தகுந்த உயரத்தை ஒவ்வொருவருமே பராமரிக்கவேண்டியது அவசியம். அந்த 75 நாள் மர்மமானது, இந்த 75 நாள் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டது! இந்த...

 • ஒரு தடிக் குச்சியினால் ஓங்கி ஓங்கி அடிக்கப்படுவது போன்ற அளவிற்குத் தீவிரமான வலி எலும்புகளிலும், கீல்களிலும் திடீரென்று ஏற்பட்டு வரும் காய்ச்சல் டெங்கு. சிலருக்கு காய்ச்சல் வாயு தோஷத்தினால் குளிர் நடுக்கத்துடன் தொடங்கும். அதனுடன் பித்த தோஷமும் சேர்ந்தால் சிறிது பிதற்றல் புலம்பலுடன் இருக்கும். ரத்தத்தின் கொதிப்பு அதிகமானால் காய்ச்சல் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று நாட்களில் உடல் பூராவும் சிறு கடுகு போன்ற சிவந்த தடிப்புகள் அம்மை போல் கண்டு அதற்கு அடுத்த இரண்டு நாள்களில்...

 • பருவமழை தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி வருகிறது. இதன் மூலமாக டெங்கு பாதிப்பு அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே எடுக்க வேண்டியதும் அவசியமாகும். டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக்கொள்வது நல்லது. கொசுக்கடியில் இருந்து காக்கும் மிகச்சிறந்த...

 • நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்யவல்லதும், மூக்கில் இருந்து ரத்தம் வடிதலை தடுக்க கூடியதுமான தேக்கின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். மரவேலைகளுக்கு பயன்படும் தேக்குமரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலை, பூக்கள், மரப்பட்டை மருந்தாகி பயன் தருகிறது. தேக்குமர பூக்கள்...

 • விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை நேராக நீட்டியபடி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு இடதுகாலை நேராக தரையில் வைத்துக் கொண்டு வலது காலை அபானாசனத்தில் செய்ததுபோல் மார்பை நோக்கி மடக்க வேண்டும். இப்போது வலதுகாலை இடப்புற பக்கவாட்டில் மடக்கிய நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும். இடது கையால் வலக்காலை பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கை வலப்பக்கம் தரையில் நீட்டியவாறும், தலை வலப்பக்கம் அதாவது எதிர்த்திசையில் திரும்பிய நிலையில் இருக்க வேண்டும்....

 • டெங்குக் காய்ச்சல் ‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால்...

 • நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை போக்க கூடியதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உடையதும், கொழுப்பை கரைக்க கூடியதுமான தக்காளியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தக்காளி. விட்டமின் சி சத்து நிறைந்த இது, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மார்பக புற்று, குடலில்...

 • பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கும். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகிறது. வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் உயிருக்கே உலை வைக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய் அதிகம், கடுமையாக பாதிக்கும்....

 • கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இரண்டுமே ஓரளவு இயல்பானவைதான். கர்ப்ப காலத்தின்போது தாயின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் சிலருக்கு இந்தப் பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால், வயிற்றில் உள்ள கருவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வயிற்றுப்போக்கு திடீரென ஏற்படுகிறது என்றால் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் ஏதேனும் பிரச்சனை இருக்கக்கூடும். அசுத்தமான தண்ணீரை குடிக்கும்போதும் அதில் சமைக்கும்போதும் அதில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணியிர்களாலும் பிரச்சனை வந்திருக்கலாம். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே எப்போதும் குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துங்கள்....